Anandha Barathi
சன்மார்க்க தீபாவளி ! - :)
1. சன்மார்க்க தீபாவளியா?

வரும் ஆண்டு முதல் சன்மார்க்க முறைப்படி தீபாவளி எங்கள் வீட்டில்!

2. இது என்ன புதிதாக ?

புதியது தான் ஆனால் பழையது.

3. ஏன் கொண்டாட வேண்டும்?

பெருமானார் கொடிகட்டி, பேருபதேசம் செய்த மாதம் அதனால்.

4. பெருமானார் யார்?

நம் திருஅருட்பிரகாச வள்ளலார் தான்.

5. என்ன கொடி?

சன்மார்க்கக் கொடி

6. எதற்கு?

இறைவனின் அருள் அரசாட்சியை, உலகிற்கு உணர்த்த.

7. ஒகோ

ஆம்

8. அது என்ன பேருபதேசம்?

சன்மார்க்க நெறியின் சாரமாக ஐயா மக்களுக்குச் சொன்னது.

9. ஐயா என்ன சொன்னார்கள்?

வீண்காலம் கழிக்காமல், கருணை நன் முயற்சியை மேற்கொள்ளச் சொன்னார்கள்.

10. அதனால்?

காருண்ய உணர்வோடு தீபாவளி கொண்டாடினால் நலம் பெறலாம்.

11. எப்படிக் கொண்டாடலாம்?

நம்மிடம் உள்ள இருள் மல மாயைகள் நீங்க வேண்டிக் கொண்டாடலாம்.

12. இருள்மலம் என்றால்?

ஆணவம், கன்மம்,

13. மாயை என்றால்?

மாயை, திரோதானம், மகாமாயை.

14. இவை என்ன செய்கின்றன?

நம்மையும் ஆண்டவனையும் பிரித்து வைக்கின்றது.

15. அடக்கடவுளே?

ஆம் அந்தக் கடவுளைத்தான் காண முடியாதபடி செய்கின்றது.

16. மலம் மாயை நீங்கினால்?

ஆண்டவனும் ஆன்மாவும் ஒன்றாகி ஆனந்தம் தான்.

17. நீங்கவேண்டும்! விரைவில் நீங்கவேண்டும்!

அதற்குத்தான் தான் உம்மைத் தீபாவளி கொண்டாட சொன்னேன்.

18. ஓகோ?

ஆம்.

19. பட்டாசு?

சிற்றுயிர்களுக்குத் தீங்கும் அச்சமும் உண்டாக்கும் அதனால், தவிர்க்கலாம்.

20. வெடி வைத்து பழகி விட்டேனே? வைக்காமல் இருக்க முடியுமா?

அப்படி என்றால் உள்ளே இருக்கும் பஞ்சமா பாதகத்திர்க்கு வெடி வைக்கலாம்.

21. அது எப்படி?

இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதால்.

22. நல்ல யோசனை!

ஆமாம், இது ஐயாவின் யோசனை.

23. எண்ணைத் தேய்த்து குளிக்கலாமா?

தாராளமாக, பெருமான் நித்திய கரும விதியில் கூறியுள்ளாரே!

24. புத்தாடை?

பட்டாடை வேண்டாம்.

25. மற்றவை?

நீங்கள் உடுத்துவதோடு, ஒரு ஏழை பிள்ளைக்கும் புத்தாடை வழங்கலாம்.

26. உணவு?

அசைவ உணவு, மது போன்றவை அணு அளவும் வேண்டாம்

27. மற்றவை?

நல்ல சைவ உணவு நாமும் உண்ணலாம், மற்றவர்களுக்கும் அன்னவிரயம் செய்யலாம்.

28. வழிபாடு?

அருள் ஜோதி வழிபாடு தான்.

29. எப்படிச் செய்வது?

தீப முன்னிலையில் ஆண்டவர் விளங்குவதாக நினைத்து.

30. தோத்திரம் வேண்டுமா?

வேண்டும், வேண்டும்.

31. என்ன தோத்திரம்?

அருட்பா தான், திருவடிப்புகழ்ச்சி, அகவல் மற்றும் பல.

32.கோயிலுக்கு?

தாராலமாகப் போகலாம், தருமமும் தானமும் செய்யலாம்.

33. எல்லாம் சரி, பட்டாசு விஷயம் தான்?

பாவம், நம்மைச் சுற்றியுள்ள உயிர்கள் துன்பம் அடைகின்றதே, அதனால் வேண்டாம்.

34. பட்டாடை ஏன் வேண்டாம்?

அதன் தயாரிப்பு முறை உமக்கே தெரியுமே!

35. மிகக் கொடுமை தான்!

மிக மிகக் கொடுமை.

36. இது காருண்ய தீபாவளியா?

ஆம் அப்படிக் கொண்டாடினால், ஆண்டவர் அருள் பெறலாம்.

37. நான் தான் இல்லறவாசி ஆயிற்றே?

அதனால் என்ன, உமக்கு முதல் லட்டு.

38. அப்படியா?

அப்படியே தான்.

39. நானும் சன்மார்க்க தீபாவளி கொண்டாடுகிறேன்.

ஆண்டவன் அருள் உமக்கு நிச்சயம்.

40. ஞாபகப்படுத்தினீர் நன்றி!

உமக்கும் குடும்பத்தார்க்கும் நல் வாழ்த்துக்கள்.

நன்றி!

Sanmarkka Deebaavali.jpg

Sanmarkka Deebaavali.jpg

2 Comments
Durai Sathanan
சன்மார்க்கத் தீபவொளி சகத்தெங்கெங்கும் ஒளிபரப்பி அருள்செய்யட்டும்...அருட்பெருஞ்ஜோதி ...
Saturday, November 7, 2015 at 11:35 am by Durai Sathanan
Anandha Barathi
அன்பர்கள் அனைவருக்கும் இனிய சன்மார்க்க கொடி நாள் மற்றும் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்!
Tuesday, October 17, 2017 at 03:57 am by Anandha Barathi