www.vallalarspace.com/durai
ஐம்மலம் வென்றாரே அம்பலம் நின்றார்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

மும்மலம் வென்றாரவர் முத்தி பெற்றார்
ஐம்மலம் வென்றாரவர் சித்தி பெற்றாரே
மும்மலம் வென்றவர் அம்பலம் கண்டார்
ஐம்மலம் வென்றாரே அம்பலம் நின்றார்!

மும்மலம் கடந்தஅனுபமே தீக்ஷையாம் அதுமுத்தியாகும்
அம்பலம் நின்றாடும் கூத்தனாவதே உயர்சித்தியாகும்சிறு
கம்பளம் மென்றேஎன்னாதீர் அதுவும்ஐந்தொழில் புரியும்
அம்பலம் நின்றேநீர்அன்புடன் அதனை ஆடுகஎன்றிடவே!


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
உங்கள் அன்பன் துரை சாத்தணன்