தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!
கடந்த ஞாயிறன்று (14.05.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய நேரலை (worldwide live-event) நிகழ்வில், காஞ்சிபுரம் வாழ் தயவுத்திரு.தனபால் ஐயா அவர்கள், "வள்ளலார் பெற்ற சிற்சபை, பொற்சபை, ஞானசபை அனுபவங்கள்" - என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவை நம்மவர்களுக்காக இங்கே பணிவன்புடன் பகிர்வு செய்துள்ளோம்!
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." - திருக்குறள்
கேட்டு நற்பலன் பெருவோம்!
திருநெறி நின்றுநாம் திருவருள் பெற்றுய்திட
ஒளிநெறிப் பயிற்சிமிக அவசியம்என்ற ஐயா
ஒளிநெறி பற்றியும் முழுத்தகவல் தராதுஇன்று!
திருநெறிச் சபைகள் குறித்தும் திரமுறக்கூறல!
சுத்த சன்மார்க்கிகளை வேதிக்கின்ற சொற்பொழிவுஇதில்
சமயமத சன்மார்க்கியிங்கு தான்சாதித்ததாகப் பேசுகிறார்
உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்
அச்சச்சோவென்ற அவலிப்போடு மெச்சவும் பேசியபேச்சிது!
சென்றோடும் பொழிவிலா மேகத்தால் ஏதுலாபம்
என்றாலும் அகிலஉலக நேரலையில் பேசப்பட்டது
குன்றாமல் ஒலிர்கின்ற உரையிதனில் அன்னமாய்
நன்றான கருத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம்!
குருவென்றால் அருளென்று அறியாதே பலர்
குருவை இப்புறவுலகில் தேடித்தேடி அந்தோ
குருடர் கைநிற்கும் தடியானர் கோடிக்கோடி
குருடரோடு கைத்தடியோ கற்றது கல்மடமே!
தயவுத்திரு தனபால் ஐயா அவர்களுக்கு
தயவுடன் திருவருள் பேரருள் புரிகவேநற்
கனிதரும் நம்மார்க்கம் திரமுறத் தெரிகவே
இனிவரும் நாளெலாம் இன்புற்று வாழ்கவே!
இறையருட் செயலோ வேறெதுவோ இடைஇடையே
இணைப்பிலே ஏற்பட்ட துண்டிப்போ நிரந்தரமானது!
இருப்பினும் இவ்வெளியன் பகர்ந்திட்ட சிற்றுரையால்
இணைப்பிலே இருந்தார் இனிதுற நிகழ்ந்ததுநேரலை!
தயவுத்திரு.தனபால் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
நன்றி, வணக்கம்! சுபம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathana