Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 112. பன்னிரண்டாம் அதிகாரம்..மெய் இந்திரிய ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
உருகண் டுருகாதே யுட்பெருகும் அன்பால்
வருமுயிர் காத்து மகிழ்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     புறத் தோற்றத்தைக் கண்டு உள் மயங்கி முயங்காமலும், வெறுத்து மறுக்காமலும், உளநிறை தயவோடிரங்கி, சூழ்நர்க்கு உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் உண்டாக்கி உவந்திருத்தல் வேண்டும்.

     அகத்திருக்கும் அன்புருவத் தாண்டவர் ஆணையால்தான் எவ்வுயிரும் எப்பொருளும் நமைச் சூழ்கின்றன.

     ஆதலின், உண்மை உணர்ந்து அன்பால் வருமுயிர்களைக் காத்து மகிழ்வு செய்தலே இம்மனிதப் பிறப்பின் பயன்.
IMG_20150913_221429.jpg

IMG_20150913_221429.jpg