Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.124.மனம்.பதின்மூன்றாம் அதிகாரம்..சுவாமி சரவணானந்தா.
மாதயா வள்ளல் மனத்துரு கொண்டின்று
பேதமை தீர்ப்பதெனப் பேசு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=

உரை விளக்கம்.

     பெருந்தயவுடைய நம் பதியே தன் இயல் உண்மைத் தன்மையை மறைத்துக் கொண்டு, நமது மனமாக உருவெடுத்துள்ளார் இன்று.

     இது ஏன் ? எனில், நமக்குப் பக்குவம் வருவித்து, அறியாமையைப் போக்கி, அறிவாலே தனது அருள் உண்மையைக் காட்டிக் கூட்டி வைக்கவே என்க.

     மனதின் உண்மை நம்  பதி வடிவாய் இருப்பதினால்தான், நம் மனம் மாசற்று சுத்த அன்பு மயமாக ஆக ஞானானந்தக் கடவுள் நிலை சித்திப்பதாக உள்ளது.
IMG_20160729_131107.jpg

IMG_20160729_131107.jpg