Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.125.மனம்.பதின்மூன்றாம் அதிகாரம்..சுவாமி சரவணானந்தா.
இரட்டுற வுள்ள இயல்மனப் போக்கை
அருட்டுறை சேர்த்து அடக்கு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     நாம் பெற்றுள்ள மனதினுடைய தன்மை இரட்டுற உள்ளது. ஒன்று, ஆவலினால் பொறிவாயில் புகுந்து புறத்தே உழல்வது. மற்றொன்று. நிராசையுடன் கூடி அக நோக்கிச் செல்வது.

     அறியாமையால், இருள் வழியிற் சென்று உழலும் மனத்தை, நல்லறிவினால் மறுத்து அக நோக்கிச் சென்று அருள் ஒளியில் தங்கச் செய்தல் வேண்டும். மனம் அருள் ஒளி சேரலே, நல்லொழுக்கமாம்.
20140713_221310.jpg

20140713_221310.jpg