Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள எண்.41...ஐந்தாம் அதிகாரம்....சுவாமி சரவணானந்தா.
ஆழ்ந்தகத் துள்ள அவனருட் சக்தியே
சூழ்ந்திடுந் தெய்வமெனச் சூழு..

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     ஒன்றான கடவுள் அகத்தே மறைந்துள்ளதைக் கண்டோம். அக்கடவுள் சக்தியே அருட்ஜோதியாகிச் சூழ்ந்து உலகெல்லாம் நிறைந்துள்ளதாம். இவ்வருட் ஜோதியே பலவாகிய தெய்வ வடிவங் கொள்வதாகும்.

     அகமுடையானின் அருட்சக்தியே புறத்தே, ஜோதியாய், உயிராய், உருவாய், ஆற்றலாய், நியதியாய், விதியாய், உலகெல்லாமாய்ச் சூழ்ந்துள்ளது. இவை தனித்தனி ஒவ்வொரு அம்சமும் தெய்வமாகவே போற்றிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிலையில்.
IMG_20170101_175753.jpg

IMG_20170101_175753.jpg