Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.43. ஐந்தாம் அதிகாரம்.. தெய்வம்..சுவாமி சரவணானந்தா.
வாழ்வளிக்க வல்லூழ் வகுத்தானைச் சார்ந்தார்க்கே
ஊழ்வெல்லு மாற்றலு முண்டு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     வாழ்வின் குறிக்கோள் கடவுள் நிலை அடைந்து, கழியாப் பேரின்பில் என்றும் திகழ்வதேயாம். முடிவில் இந்நிலையைக் கூட்டி வைப்பதற்காகவே சூழ்ந்தியங்குகின்றது.   ஊழ்வினை. நல்வினைப் பயனால் இகபர இன்பத்தையும், தீவினைப் பயனால் துன்பத்தையும் வழங்குவதே இவ்வூழின் நியதி.

     இவ்வுண்மையை அருள் உணர்வினால் கண்டு தேறி, இன்ப துன்ப அனுபவத்தில் பற்றற்று. ஊழுக்குக் காரணமாகிய கடவுள் அடி சார்ந்து, சுத்த தயவினால் வாழ்பவர்கள் ஊழை வென்று உலவா இன்ப நிலையில் திகழ்வார்கள்.

     மற்றெந்த வகை முயற்சியாலும் எவரும் ஊழை வெல்லுவது கூடாத ஒன்றாம்.
IMG_20150802_102535.jpg

IMG_20150802_102535.jpg