Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.62 ஏழாம் அதிகாரம்..பொது ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
உலகத்தோ டொட்டி யொழுகற்குக் கற்க
பளகற்ற வாழ்வின் பயன்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     நமது வாழ்வில் அடைய வேண்டியது, பளகு (குற்றம்) அற்ற பயனாம் பேரின்பம். இதற்காக நாம் கற்க வேண்டியது, உலகத்தோடு ஒட்டியொழுகு முறையேயாம்.

     அகத்துள்ள கடவுளுக்கும், புறத்துள்ள உலகுக்கும் உள்ள தொடர்பாகிய ஒட்டு, அருட்சக்தியேயாம். இதனைக் கற்று, இதன்படி ஒழுகுதல்தான் உலகத்தோடொட்டி வாழ்தலாம்.

     உலகைத் துறந்து ஒழியாமலும், உலகத்திற் கலந்து அழியாமலும், அருள் ஒழுக்கத்தினால் உலகத்துடன் ஒட்டி வாழத் தெரிந்து கொண்டால், பெற வேண்டிய பயனைப் பெற்றுக் கொள்ளலாம்.


IMG_20150802_102600.jpg

IMG_20150802_102600.jpg