Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.63 ஏழாம் அதிகாரம்..பொது ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
நல்லொழுக்க மென்றுந் நலந்தரலால் மேற்கொண்டு
புல்லொழுக்கந் தீண்டற்க போந்து.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     நல்ல ஒழுக்கத்தால் எல்லாவித நன்மையும் இன்பமும் கிடைக்கப் பெறுதல் உண்மை. ஆதலின், அவ்வுயரிய ஒழுக்கத்தைப் போற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

     ஈதல்லாத தீயொழுக்கத்தை, மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் தீண்டாது விட்டொழித்தல் வேண்டும்.  மேல் உயர் நிலைக்கு ஏற்றுவது நல்லொழுக்கம். அந்நிலையினின்று நழுவிக் கீழ்ப்போந்து கெடுதல் கூடாது.
IMG_20150802_102535.jpg

IMG_20150802_102535.jpg