Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தியாகச் சுடர்..சுவாமி சரவணானந்தா.
தியாகச் சுடர்.

சுவாமி சரவணானந்தா.

(தியானமும் தியாகமும் என்ற நூலிலிருந்து.)

000000000000000000000000000000000000000000000000000000000000000000

     வானிலே இருந்து ஞாயிறு கதிர்க் கோடிகளை இடையறாது பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. அக்கதிர் ஒளியின் செயலாலே இந்த உலகில் எப்பொருளும், எவ்வுயிரும் தோன்றி வாழ்ந்து வருகின்றன.  இதே சமயம் ஆன்மாகாசமாகிய அக வானிலே இருந்து தியாகச் சுடர் ஒளிக்கற்றையைப் பரப்புகின்ற பதியின் செயலால் மனிதனுக்கு இத் தியாக உண்மை விளக்கத்தையும் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்கின்றார். இது கொண்டு இவன் இவ்வுலகிலே இறை வாழ்வு வாழ வேண்டியவனாயிருக்கின்றான். இந்த இறை வாழ்வு ஜீவதயாவொழுக்க நெறியால் உண்டாகின்றதாம். அந்தத் தயவும் சுத்த ஞானமும் செயலும் கொண்டு அகமிருந்து மலர்ந்து மணக்க வேண்டியுள்ளதாம். அப்போது தான் மனிதன், தியான நிலை நின்று தியாக மயமாய் வாழ்வில் நிறைவு பெறுகின்றான். இத்தியாக நிறைவுதான் மக்களாய்ப் பிறந்துள்ள ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டும்.

     இந்நாள் உலகம், தியாகத்திற்கு முதலிடம் கொடுக்கின்றதில்லை. அதற்கு மாறாகத் தேகத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கின்றது. ஆம் தேகங்கள் தான் மிக அதிகமாகப் படைக்கப்பட்டு ஜனத்தொகை காட்டு வெள்ளம் போலப் பெருக்கெடுத்துக் கொண்டேயிருக்கின்றதாம். தேக போகம் பெருகும் உள்ளத்தில் தியாகபாகம் எங்கு, எந்த அளவுக்கு இருக்க முடியும் ? இன்றைய தேகிகளும் தியாகம் புரிகின்றார்கள். அந்த தியாகம் ஏதோ தெய்விகக் குறிக்கோளாய் இல்லாது, மாய வாழ்வின் அற்ப லட்சியங்களாய் இருக்கின்றன. தான் ஒன்றை அடைய வேண்டி தயவுச் செயலாகிய தியாகம் செய்ய வேண்டியதை விட்டு, தயவில்லாது உயிர்த் தியாகத்தையும் அழிவுச் செயலையும் மிக இலேசாகச் செய்து விடுகின்றான். உண்மைத் தியாகம் விளங்கினால் உலகியலில் இப்பொழுது தலைவிரித்தாடும் கொடிய பிரச்சனைகள் எல்லாம் விரைவில் ஒழிந்து போம். அறிவியல் சாதனைகளைத் தியாக மனப்பான்மையோடு பயன் படுத்தினால் எவ்வளவு நல்வாழ்வு உலகில் பெருகிடும்..
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png