Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பூரணன்..(ஒன்று மூன்றான உண்மை)...சுவாமி சரவணானந்தா.
ஒன்று மூன்றான உண்மை. (என்ற நூலிலிருந்து)
1. பூரணன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

 
    அறிவு நிரம்பிய இம்மனிதப் பிறவியைச் சிறப்பித்துப் போற்றிக் கொள்ளாதவர்கள், உண்மையைத் தெரிந்து கொள்ளாதவர்கள். மனிதனுக்கு அறிவு மன உணர்வினால் விளைவு கொண்டுள்ளதாகும். இந்த மனம் தான் இப்பிறப்பிக்கு ஏற்பட்ட ஒரு சிறப்புத் தத்துவக் கருவியாம். மனம், மனிதனை விளங்கச் செய்கிறது என்றால் மிகையாகாது. பிற உயிர்களுக்கும் உணர்வு இருக்கிறது. ஆனால் அது புலனுணர்வு மயமாக இருந்து, குறிப்பிட்ட குறிப்பிட்ட சில சுபாவம் அல்லது இயற்கைக்குண அனுபவமாய் இருப்பதாம். மனிதனில் மட்டும் இந்தச் சுபாவ குணம் மன அறிவால் விளைவும் தெளிவும் பெற்று மேலான அனுபவத்தைக் கொள்ளுவதாயுள்ளதாம். மனிதனுக்கும் புலனின் விளக்கமும் அனுபவமும் விளங்குகின்றன. மனத்திலே எந்த அளவுக்கு அன்பும் அறிவும் தூய்மையும் விளங்குகின்றனவோ அந்த அளவுக்கு நன்மையும் இன்பமும் உண்டாவது இயற்கை. அந்த மனத்தில் அறிவும், அன்பும், தூய்மையும் இல்லையானால் தீமையும், துன்பமும் தான் விளைவு கொள்ளும். பகுத்தறிவற்ற ஏனைய உயிர்கள் இயற்கை நியதிப்படி வாழ்ந்து வருகின்றன. இன்ப துன்பங்களைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. அவ் உயிர்கள், மனிதன் அப்படி அல்ல, அவனுடைய பகுத்தறிவு அவனை இன்பத்தில் நாட்டம் கொள்ளவும், துன்பத்தில் விலக்கு பெறவும் தூண்டுகின்றது. ஆனால், அவனுக்கு நல்லொழுக்க பழக்கம் இயல்பாகவே ஏற்பட்டிருந்தால், அவன் நாடுன் இன்பம் நல்லதாகவும், தனக்கும் பிறருக்கும் நற்பயன் விளைவிப்பதாகவும் இருக்கும். அப்படி அல்லாமல், அவன் தீயொழுக்க பழக்கத்தோடிருந்தால் அவனுக்கு உண்டாகும் இன்பம் உண்மையான ஒன்றாக இருக்காது. அதனால் அவனுக்கும் சரி, சூழ உள்ளவர்களுக்குஞ் சரி நன்மையுண்டாகாது. ஆகையால், மனிதன் தன் மனத்தின் கண் மாசில்லாதவனாய், தூய்மையுள்ளவனாய் இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தல் வேண்டும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்” என்பது ஆன்றோர் வாக்கு.
New Doc 2018-06-24_1.jpg

New Doc 2018-06-24_1.jpg