Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.38க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
மன்னார் நிலையார் திருவொற்றி வாணர் இவர் தாம் மெளனமொடு
நின்றார் இருகை ஒலி இசைத்தார் நிமிர்த்தார் தவிசின் நிலைகுலைத்தார்
நன்றார் அமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தார்யாவும் ஐயம் என்றேன்
இன்றா மரைக்கை யேந்துகின்றார் இதுதான் சேடி என்னேடீ.                     (இங்கிதமாலை.)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

        பொன் மன்றிலே சதா ஆடிக்கொண்டே இருப்பவர், திருவொற்றியிலே வாழ்பவர். மெளனியாக முன் வந்து நின்று, தனக்கு இன்னது வேண்டும், என்பதை வாயினால் சொல்லாது, சங்கைக்குரிய பல் வகை செயல்களால் குறிப்பிடுகின்றார். 

            இருகை ஒலி இசைத்தல்--இது சோற்றைக் குறிப்பதாம். சோற்றுக்குத் தாளம் போடுகிறான் என்று சொல்வது உலக வழக்கு. சோறுண்ட போது ஏற்படும் இன்பம், பாட்டும், கூத்தும் நிகழ்வதாம்.  இருகைகளில் இருப்பது பத்து விரல்கள். பத்தாகிய ஆன்ம உண்மையைச் சுட்டும். இருகையொலி இசைப்பது ஆன்மாவில் அந்தமாகிய ஆன்ந்த நிலை. இதுவே முத்தியாம் சோறு.

         நிமிர்த்தல் என்றால், தெளிவு பெறச் செய்தல், உயிர் விளக்கம் அடைவித்தல் இதுவும் அன்னத்தால் ஆவது காரணமாகவே இதனையும் சோறு என்றே மொழியப்படும்.

           தவிசு என்றால் ஆசனம். இதன் நிலையைக் குறைத்தலால் அசனம் என்றாகும். இந்த அசனம்; சோறு என்னும் அருத்தம் கொண்டதே.

       உமிழ் நீரை அமுது என்பர்--அமுதும் சோறே. உமிழ்ந்தார் என்றால் துப்பினார் என்று பொருளாம். இதிலும் துப்பு என்பதும் சோறே.

      நடித்தல் என்பது சதி என்றும் அதுவும் சோறு என்றும் கொள்ளப்படும்.

       ஆகவே, இவ்வளவும் என்ன என்பது ! ஒரே ஐயம் தான் ! இந்த ஐயம் தலைவிக்கு சந்தேகம் ஆக இருக்கிறது. ஆனால் அவரோ, ஐயம் என்றால் பிச்சை என சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளாள் என எண்ணுகின்றாராம் தலைவர். அப்படி எண்ணித்தான் தனது இனிய தாமரை போலும் கையினை ஏந்துகின்றார்.

        உலகிடை வாழ்விலே, நமக்கு மெய்யின்பம் வழங்க நம் பெருமான், பிச்சை வாங்க (நம் அறியாமைப் பித்தையொழிக்கவே) பலப்பல வகையில் நமைச் சூழ்ந்து ஆன்மானுபவமாகிய, அன்னம் அளித்து இன்பு செய்தலை வளர்க்கின்றார். ஐயம்களுக்கு எல்லாம் மேலானதும் முடிவானதும் அருட்ஜோதி அமுதமே. அதனையே நமக்கு மேனியலை திருவோட்டில் கண்டு கொள்ளச் செய்ய உள்ளார் நம் பதி,   அவ்வளவும் இங்கிதமே.
IMG-20170527-WA0084.jpg

IMG-20170527-WA0084.jpg