Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
எழில்...சுவாமி சரவணானந்தா.
        எழில்   என்பது அழகு எனப் பொருள்படுவதாம். அழகாவது புறத்தோற்றத்திற் காணப்படும் வியத்தற்குரிய இயல்பாகும். இயற்கைத் தோற்றங்களில், இது கை புனைந்தியற்றாக் கவினாக விளங்குகின்றது. இக்கோல விளைவுக்கு அகத்தும் புறத்தும் மறைந்திருக்கும் தெய்வீக சக்தியே உதவுகின்றதாம். அந்த அகமிருக்கும் தெய்வ சக்தியில் புற அழகுக்குக் காரணமான அழகுச் சத்து இருக்கின்றதாம். அது மன்எழில் எனப்படும். இதிலிருந்து எழக்கூடிய சக்தியே புறப்பொருட்களைக் கவர்ந்து தன் பொங்கெழில் வண்ணமாக ஏற்று விளங்குவதாம். இதனால் தெய்வம் அழகுத் திருவுரு கொண்டதாய்க் கொள்ளப்படும். முருகன், சுந்தரன், எழிலன், என்பன இக்காரணத்தால் வந்த கடவுட் பெயரேயாம். திருமாலாகிய நீலமேக வண்ணன் எழிலன் தானே, இதனால் மேகத்தையே கூட எழிலி என்று சொல்லுகின்றார்கள். புற அழகுத் தோற்றத்திற்குப் பொறுப்பாயிருக்கும் அக அழகு, “பொற்பு” எனப்படுகின்றது. கடவுள் அகத்தே விளங்குவது அதனுடைய தன்மையாம் தயவுதான் தெய்வமாய் புறத்திலங்குவது. இத் தெய்வம் பொலிவுடையதாகையால் எழில் கடவுளுக்கு அடுத்துள்ளதாம். Beauty is second to God என மேனாட்டார் குறித்துள்ளனர். ஆறாதாரங் கடந்த ஏழாவதாகிய நிராதார நிலையில் இருக்கும் கடவுள் ஆன்மாவை ‘எ’ என்னும் எழுத்தால் சுட்டப்படுகின்றது. அத்தோடு ஆன்மக் கருவாய் ‘ழ்” அருள் இகரமும் இணைந்து நின்று ‘ல்’ என்னும் திரயோதச மெய் வெளியில் திகழ்கின்றதுதான் இந்த எழில் என்பது சுத்த சன்மார்க்க அனுபவமாம். புலன் வாழ்வு ஏற்றுள்ள மக்கள் புறத்தே காணும் பொங்கெழிலை மோகித்து வீண் போகின்றார்கள். அகம் திகழ் மண்ணெழிற் பொருளை மருவி நின்று, அனக வாழ்வு வாழும்போது புறத்தோற்றம் கூட அனக எழிலாக அனுபவப்படுவதாம். இந்த தோற்ற நிலை அகத்திருக்கும் மன்னெழிற் சேர்ப்பால் விலகுகின்றதால், எக்காலும் மாற்றமும் அழிவும் இல்லாது விளங்க வல்லதாம். நம் வள்ளல் பெற்றுள்ள சுத்த பொன்மேனி இதுவாகும். 


vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png