Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
8.4.2020..Arutperunjothi Agaval lines 1161-1162 Explanatory Note by Swami Saravanaananda of Dindigul.
திரு அருட்பா...அருட்பெருஞ்ஜோதி அகவல்.வரிகள் 1161-1162.

உரை விளக்கம்..

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா.

--------------------------------------------------------------------------------------

1161. எவ்வகை திறத்தினு மெய்துதற் கரிதாம்
1162. அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே.

--------------------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதியின் அனுபவ நிலையானது, நம் அருட்பெருந் தந்தையாரின் இயற்கையுண்மை நிறை வண்ணமாகும். ஆதலின் அந்நிலைப் பேற்றை அடைவது என்பது, அவ்வருள் மயமாவதேயன்றி வேறல்ல. மற்ற எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கரிதாம். அதாவது, மனோசக்தி, தேகேந்திரிய சக்தி, யோக சக்தி, ஞான சக்தி, மந்திர சக்தி, தந்திர சக்தி, பொருட் சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி, மாயா சக்தி முதலிய எவ்வகைச் சக்தியைக் கொண்டும் நம் பதிநிலையை அடைதல் கூடாதாம். எனவே, அந்த எவ்வகைத் திறத்தினிடத்தும் பற்று வைத்து முயன்று, அடைந்து மேனிலைக்கு ஏறாது, தடைபட்டு போகாது, அருள்பாலித்து ஆண்டு கொண்டுள்ள அருள் தந்தையை அனவரதமும் போற்றுவோம்.

முன்னிருந்த மக்களிற் சிறந்தோர் எவ்வளவோ காலமாக எப்படியெல்லாமோ தவமுயற்சிகள் செய்து அடைந்த அற்புத சித்திகளும், அரிய பதவிகளும், பெரிய அனுபவங்களும் குறைவும் நிலையாமையுமுள்ளனவாய், அருட்பெருஞ்ஜோதியால் இன்று கண்டு அடையப் பெற்றுள்ளதாம். வேறு வகையாகக் கூறின், எவராலும், எவ்வாற்றலாலும், எவ்வகையிலும் அடைதற்கு முடியாத அருட்பெருஞ்ஜோதி நிலையை, அதுவே வள்ளல் வடிவில் நிறைநிலை பெற்று, அவராய் விளங்குவதாய், அருட்பிரகாசமாய்த் திகழ்வதாய் உணர்கின்றோம். இப்படிக் கடவுளே அருட்பிரகாசராய்த் திகழ்கின்ற உண்மையை அருளாற் காண்கின்றோர்களே, நித்திய பரம்பொருளை வள்ளல் வடிவில் காணக் கூடும். ஏனையோர் அது வேறு, இவர் வேறு என்று கருதிய்ம் வெளியிட்டும் புறம்போந்து ஒழிகின்றார்கள். அது தவறு. வள்ளல் வடிவில் விளங்கிக் கொண்டுள்ளது ஒவ்வொருவரின் உண்மைக் கடவுளாய்க் கண்டு உலகவர்க்கு அன்பு செய்திடல் வேண்டும்.

vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

Download: