Vallalar Universal Mission - USA
ஞாயிற்று கிழமையன்று புதிய நிகழ்ச்சி - "சன்மார்க்கம் அறிவோம்"
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே வந்தனம்! வணக்கம்!

வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் அமெரிக்கா வாரந்தோறும் ஞாயிற்று கிழமையன்று சன்மார்க்க சிந்தனை வளர்க்கும் வகையில் பல வகையான நிகழ்ச்சிகளை திருவருளால் நடத்தி வருகிறது. இப்போதும் ஒரு புதிய முயற்சியாக "சன்மார்க்கம் அறிவோம்" என்ற புதிய நிகழ்ச்சியை வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் மற்றும் வள்ளலார் கல்வி ஆராய்ச்சி நிலையம், வடலூர் ஒவ்வொரு மாதமும் நடத்த இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அது தொடர்பான குறிப்புகளும் அன்பர்களுக்கு முன்னதாகவே அளிக்கப்படும். இந்த தலைப்பில் அன்றைய அழைப்பாளர் தன்னுடைய உரையை முதலில் அளிப்பார்கள். அன்பர்கள் இந்த குறிப்புகளுடன் மற்ற புத்தகங்களையும் படித்து இந்த நிகழ்ச்சியால் சத்விசாரம் செய்யலாம்.

இந்த நிகழ்ச்சியை நடத்த அன்பர்கள் தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டுமாய் பணிவன்புடன் ஆன்மநேய உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி