SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்க்கம் எந்த வழியை மக்களுக்குக் காட்டவேண்டும்??
வள்ளல் பெருமானார் ஒருவர்தான் மரணமிலாப் பெரு வாழ்வு என்ற ஒன்று உண்டு அதனை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்றே வள்ளலார் போதித்தார். இந்த உடம்பு ஆண்டவனால் தரப்பட்ட வாடகை உடம்புதான். அதனை சொந்தமாக்கிக்கொள்வதுதான்  வள்ளலார் காட்டிய வழி.வள்ளலாரின் உடம்பும் ஆண்டவனால் வாடகைக்குத் தரப்பட்டதுதானே. அந்த உடம்பை வள்ளலார் என்ன செய்து கொண்டார். அவர் என்ன செய்து  அந்த உடம்பை அழியா உடம்பாக மாற்றிக்கொண்டார். நாம் என்ன செய்யவேண்டும் .நம் உடம்பை அழியா உடம்பாக மாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் சன்மார்க்க வழி கட்டுங்களேன் சிறப்பாக இருக்கும்.அதற்கு வேண்டிய முயற்சி இல்லாமல் உடம்பை............. 
 
3 Comments
manohar kuppusamy
Dear Iyya, You are THE senior most follower of VALLALAR AND GIVING GOOD SPEECH IN AND AROUND INDIA AND ABROAD.
YOU HAVE TO EXPLAIN TO US FOR THE ABOVE STATEMENT AND WHY ??????
Thursday, July 20, 2017 at 08:11 am by manohar kuppusamy
Damodaran Raman
ஐயா, வணக்கம். சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் என்று உரைப்பகுதியும் வேகாத காலாதிகளைக் கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த்தொழில் என்று நடராசபதிமாலை 28-ஆம் பாடலும் தெளிவு படுத்தி யிருக்கும்போது வீண் குழப்பம் எதற்கு? வள்ளலார் சிவ யோகம் செய்தார் என்பதற்கு ஏராளமான சான்றுகளை ஆறாந்திருமுறை அருட்பாக்களில் காணலாம். சிவ யோக நிலையில் உள்ள அருட்பாக்களைப் படித்தாலே உண்மை விளங்கும்.சிவ யோகத்தைத் திருமந்திரம் மற்றும் பதினெண் சித்தர் நூல்கள் விளக்குகின்றன.சிவ யோக வெற்றியால் போகாப்புனல் என்னும் அமுதத்தை உண்டால் அழியும் உடம்பை அழியா உடம்பாக்கலாம். இதுதான் சுத்த சன்மார்க்கம்.
Thursday, July 20, 2017 at 10:15 am by Damodaran Raman
Muthukumaaraswamy Balasubramanian
ஐயா சிவயோக நிலையோ அதற்குரிய பயிற்சியோ என்னவென்று எழுதிவிடுங்களேன்.சிவயோகம் வள்ளலார் செய்தார் என்று எந்தப் பாடலை ஆதாரமாகக் காட்டுகிரீர்கள்.நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி.
Monday, November 20, 2017 at 07:02 am by Muthukumaaraswamy Balasubramanian