SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரைப் புரிந்து கொள்ளுங்கள் 1
வள்ளலாரே தன்னை வணங்கவேண்டாம் என்று சொல்லி இருக்க அவரது படத்தையோ உருவத்தையோ வைத்துப் பலர் வழிபாடு செய்து வருகிறார்கள். இது  தவறான செயல் என்று பலர்  பேசியும் எழுதியும்   வருகிறா ர்கள். அடக்கமே உருவான வள்ளலார் அப்படிச் சொல்லி இருக்கலாம். அவர் பெற்ற பேற்றையும் அடைந்த கடவுள் மயத்தையும் நாம் உணரவேண்டாமா. வள்ளலார் கைப்பட எழுதிய திரு அருட்பாவை மட்டுமே ஆதாரமாக வைத்து இதனை ஆய்வு செய்வோம்.அவர் கைப்பட எழுதிய அருட்பாவைப் பாருங்கள்

இகத்தும் பரத்தும்  பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே 
முகத்தும் உளத்தும் களி     துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி  
சகத்துள்ளவர்கள் மிகத் துதிப்பத்   தக்கோன் என வைத்து என் 
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உந்தன் அடைக்கலமே.

இந்தப் பாடலில் வள்ளலார்  என்ன சொல்லி இருக்கின்றார். இந்த உலகத்தில்  உள்ளவர்கள்  மிகவும்  துதிக்கத் தகுந்தவராக எனை இறைவன் வைத்து அவரது அகத்தும் புறத்தும் விளங்குகின்றானாம். மக்களால்  இந்த உலகத்தில் உள்ள மக்கள்  அனைவராலும் துதிக்கத் தகுந்தவராக வள்ளலாரை இறைவனே வைத்திருக்கின்றானாம். எனவே வள்ளலார்  வணங்கத் தக்கவரே.  
நமக்கெல்லாம் துணையாக இறைவன் வள்ளலாரை மட்டுமே வைத்திருக்கின்றான். 

எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே 
எல்லார்க்கும் துணையாக இருக்க வைத்தாய்    எம்பெருமான் 
எல்லார்க்கும் பொதுவில்    நடம்    இடுகின்றோய்   இவ்வண்ணம் 
எல்லார்க்கும் செய்யாமை   யாது குறித்து   இசை எனக்கே. 

நம் எல்லார்க்கும்   துணையாய் இருக்கும்   வள்ளலாரை   வணங்காமல் விடலாமா. 
4 Comments
ram govi
Ayya, you are an embodiment of knowledge/authority on SSSS for almost 6 decades!!Can we also not pray/worship to him through Antha/Karanam:
Manam (Mind)
Bhuddhi (Knowledge)
Cittham (Chattu -'Chittu -Aanandam)(Inner or Sub-Consciousness)
Ahankaaram (Ego)
Wisdom Of Self Realization ( Arivu = Ariyakkoodiya Arivu)(searching/enquiring/questioning)...pictures/photos will call for irritation from other path seekers such as Baba,Sai,Bangaru,Jehova,Ghalil etc.,? is it not good for an evolved individuals to print color papers, paint, frame (wood) etc., and imbalance nature by pollution, carbon foot print etc.,
are we not undermining greater APJ(Creation/Creator/Created) which/whom existed before Peruman and compassiontely longing for all of us to become It/He itself/Himself? Who in the world/comsos can yield his own unattainable position itself for its creations? Only APJ will/can do it...because it/He is the Perfect Truth who existed indefintely through compassion!!.
Friday, July 28, 2017 at 15:25 pm by ram govi
manohar kuppusamy
Dear Thiru Ram Govi, can u send your email id & mobile no.pls.
regards manohar
Wednesday, August 2, 2017 at 01:58 am by manohar kuppusamy
ram govi
Ayya please find my info:2106676728/rams_g@yahoo.com
Thursday, August 3, 2017 at 15:32 pm by ram govi
thiruma valavan
திருவள்ளுவர், திருமூலர், நால்வர் இவர்களை பார்த்திராவிட்டாலும் வள்ளலார் இவர்களை தெய்வமாகவே வணங்கினார். எனவே வள்ளலாரை வணங்குவதில் தப்பில்லை. அவரவர் பக்குவத்திற்கேற்றவாறு அவரவர் செயல்படுவர். தடுத்தல் பாவம்.
Friday, August 4, 2017 at 08:21 am by thiruma valavan