SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
. சமய நூல்களின் உண்மை

.
சமய நூல்களின் உண்மை
பெரிய புராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால்,
அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும் தத்துவமேயாம் சைவ புராணம் ,விஷ்ணு புராணம் , முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ. சம்மாரங்கள் சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ. சம்மாரங்களே இதுபோல் மாணிக்கவாசக ஸ்வாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவ சித்தியே. .மேற் குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மகான்கள் சாத்திரங்களையும், தேவாரம் ,திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்தாவாக்கி , அந்தச் சித்தி முடிக்கும் காலம் ,தினம், கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி வழக்கத்தில் வருவித்தார்கள் மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மை அனுபவ தாத்பர்யமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக்கூடும் .இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களும் அமைத்துக்கொள்க. ஒருவாறு.
( உரைநடை பக்கம் 273 )29
இந்த வள்ளலாரின் கருத்தை எவ்வளவு பேரால் ஏற்றுக்கொள்ள முடியும்? வள்ளலார் சிறந்த பக்தர் என்றும் ,பிறவி ஞானி என்றும்,அவரது
வாக்கு இறைவனின் வாக்கு என்றும், அவரால் பொய் சொல்லமுடியாது என்றும், எந்த உண்மையையும் சொல்ல அவர் தயங்க மாட்டார் என்றும் ,உண்மை அறியாது உறங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்பி உண்மை அறிவிக்கின்றார் என்றும் திடமாக உணர்வோரே வள்ளலாரின் இந்தக் கருத்தை ஏற்பர். அவர் என் இவ்வாறு சொன்னார் என்று சற்று நம் அறிவிற்கு எட்டிய வரையில் சிந்தித்துப் பார்த்தாலும் சிறிதாவது விளங்கும். வள்ளலார் பேருபதேசத்தில்கூறிய வாசகங்களை இங்குமீண்டும் நினைவு படுத்திக் கொள்வது நல்லது. இதோ அவர் வாக்கு.
"தெய்வத்திற்குக் கை கால் முதலியன இருக்குமா என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயர்
இட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள் .ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்ட பாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளை கற்பனையாகச் சொல்லி இருக்கிறார்கள்.என்று யாரும் சொல்லாத உண்மைகளைச் சொன்னார் வள்ளலார்