SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் அருட்ஜோதி ஆனாரா
சன்மார்கத்தில் பலரும் வள்ளலார் ஜோதி ஆனார் என்றே சொல்லுகிறார்கள்.அவர் ஜோதி ஆனாரா?
இதற்கு ஆதாரமான பாடல்கள்.
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து ்துலங்குகின்றாய் 
நீதி நடம் ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி  முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே. 

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு 
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு 
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு 
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு.

முதல் பாடலில் இறைவன் வள்ளலாரை எழுப்பி அருட்ஜோதியை அளித்ததாக  தெரிவிக்கிறது .
நான் அருட்ஜோதி ஆனதாக வள்ளலாரே அறிவிப்பதாக உள்ளது.  இந்தப் பாடல்களுக்கு உரை காணுமுன் ஓர் உதாரணத்தை அறிந்து கொள்வது நல்லது.
ஒருவன் ஒரு காலத்தில் ்தான். உண்ணவே உணவுக்கும் வழி இல்லாமல் இருந்தான். சில காலம் கழித்து அவனிடம் பணம் வந்து சேர்ந்தது.இப்பொழுது அவன் பெரிய வீடு கட்டிக்கொண்டான். கார் பாங்களா போன்ற வசதியான வாழ்க்கை வகுத்துக்கொண்டான். முன்பு ஏழையாகவே பார்த்த அவனது நண்பன் இப்போது அவனைப் பார்த்து மலைத்துப் போய் இதெல்லாம் எப்படியடா என்று கேட்டான்.நான் இப்போது பணக்காரன் ஆகிவிட்டேன்.வசதியான வாழ்க்கையும் அமைத்துக்கொண்டேன் என்றான். பணம் இல்லை அப்போது அவன் ஏழை.பணம் வந்தது இப்போது அவன் பணக்காரன். பணக்காரன் என்றால்  என்னி்டம் பணம் இருக்கிறதுி ்என்றுதான்் பொருள். பணம்் வந்ததால் அவனே பணமாக ்மாறி விடவில்லை பணத்தை வைத்துக்கொண்டு்
பணக்காரன் ஆனேன் என்று சொன்னது போல அருட்ஜோதியை வைத்துக்கொண்டு அருட்ஜோதி ஆனேன் ு சொன்னார். அவர் அவராகத்தான் இருக்கிறார். 
7 Comments
venkatachalapathi baskar
அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
Saturday, October 20, 2018 at 03:06 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"அவர் அவராகத்தான் இருக்கிறார்" என்றால் வள்ளல் பெருமான் சன்மார்க்கப் பெருநிலையான 'கடவுள் நிலை அறிந்து அம்மயமாகவில்லையா?




வள்ளல் பெருமான் தற்போது துவைத நிலையில் உள்ளாரா? அல்லது அத்வைத நிலையில் உள்ளாரா?
Saturday, October 20, 2018 at 03:15 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.


"நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ"

என்பது எதைக் குறிக்கிறது ?
Saturday, October 20, 2018 at 04:25 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
கடவுள் நிலை (அருட் ஜோதி) அறிந்து அம்மயமாதல் (அருட் ஜோதி ஆனேன்).
Saturday, October 20, 2018 at 04:33 am by venkatachalapathi baskar
Muthukumaaraswamy Balasubramanian
ஞான தேகம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்கிறாரே ,தேகம் இருக்கும் என்ற பிறகும் அவர் ஜோதியாகிவிட்டார் என்று சொல்லலாமா.நான் எழுதியுள்ள வள்ளலார் உடம்போடுதான் இருய்க்கிறார் என்ற கட்டுரையைத் தயவு செய்து படித்துப் பாருங்களேன்.அன்பான பாஸ்கர் ஐயா அவர்களே தங்களின் தொலை பேசி எண்ணைத் தொலைத்து விட்டேன்.தயவு செய்து எனக்கு செய்தியாக( message) அனுப்புங்களேன்.நன்றி. முபா.
Sunday, December 23, 2018 at 11:19 am by Muthukumaaraswamy Balasubramanian
manohar kuppusamy
DEAR IYYA, WE ARE LIVING IN THIS WORLD WITH ALL ASSETS AND MATERIALS/MONEY, ETC..
WE SHOULD NOT TOUCH ANYTHING AND WE HAVE TO LIVE THE PATH.
KINDLY NOTE OUR VALLALAR SOME TIME HE THROWN THE MONEY IN WELL, LAKE, ETC.
NOW A DAY ANY VALLALAR FOLLOWERS DOING THE SAME THING.
WE ARE SAVING MONEY, MATERIALS, ASSETS ETC FOR OUR FUTURE.-----???????????????
Monday, December 24, 2018 at 09:45 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
அத்வைதம் என்பது இறைவனோடு ஜீவன் இணைந்து விடுவது.அதாவது
மாணிக்க வாசகர் போல. மெய் உணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே (மகாதேவ மாலை பாடல் எண் 52) இதில் வாத வூரராகிய மாணிக்க வாசகர் இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார். வாதவூரர் இப்போது இல்லை.) இது அத்வைதம் அல்லது வேதாந்தம்..
ஆனால் இறைவன் வந்து வள்ளலாரோடு கலக்கிறான். இங்கே வள்ளலார் இருக்கிறார் இறை தன்மையோடு.இது துவைதம்.அல்லது சித்தாந்தம். வள்ளலார் வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ என்று பாடியுள்ள பாடலின்படி இறைவனோடு கலந்ததால் அத்வைதமாகவும் இன்றும் தனியாக இயங்கி வருவதால் துவைதமாகவும் இருக்கிறார்.
ஆறு கடலோடு கலந்துவிட்டால் ஆறு இல்லை.ஆனால் கடல் நீர் உள்ளே வந்து ஆற்றோடு கலந்தால் ஆறு இருக்கும் மேலும் சொன்னால் கடல் நீர் உள்ள ஆறாக இருக்கும்.இறைவனுக்குள்ள அனைத்துத் தன்மையும் தான் பெற்று தானாகவே இருந்து இயங்குவது. இது நான் புரிந்துகொண்டது .நன்றி முபா.
Monday, December 24, 2018 at 10:38 am by Muthukumaaraswamy Balasubramanian