வள்ளுவர் வள்ளலார் மன்றம்(Valluvar Vallar Mandarm)
"அயல் நாட்டிலிருந்து வந்து சொன்னாதான் கேட்பீர்கள்"- இதை வள்ளற்பெருமான் சொன்னார்களா?
"அயல் நாட்டிலிருந்து வந்து சொன்னாதான் கேட்பீர்கள்"- இதை வள்ளற்பெருமான் சொன்னார்களா?

நீண்ட யோசனைக்கு பின் ஏபிஜெ அருள் அவர்கள் அளித்த பதில்:

””நான் சொன்ன கேட்க மாட்டீங்க, அயல் நாட்டிலிருந்து (அமெரிக்கா உட்பட) வந்து எடுத்து சொன்னப் பிறகு தான் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுது நம் நாட்டிற்கு பெருமை வந்து சேரும்” என்று வள்ளலார் சொன்னதாக கூறிகிறார்கள்.

அது உண்மயா ? விளக்கம் வேண்டும் என்று பணிவாக ஏபிஜெ அருள் அவர்களிடம் போன் மூலம் வேண்டினேன்.
நீண்ட யோசனைக்கு பின்பு பதில் அளித்தார்கள்;

சகோதரரே! இது நல்ல விசயந்தானே! இதில் என்ன தவறு? ஆனால் வள்ளலார் சொன்னாரா? சொல்லி இருப்பாரா? என்றால் கண்டிப்பாக இது போல் வள்ளலார் சொல்லியிருக்க மாட்டார்கள்.

காரணம், நீங்கள் கூறியதில் உள்ளதை கவனியுங்கள் அதில் ”நம் நாடு” / நம் நாட்டிற்கு என உள்ளது. வள்ளலாரிடம் தேச ஆச்சாரம் கிடையாது என அறிக! அதற்கு ஆதாரம் உரை நடைப்பகுதி பக்கம் 410 அதில் கருணை விருத்திக்கு தடையாக சாதி சமய கட்டுப்பாட்டு ஆச்சாரங்கள் உள்ளன என்கிறார். இது வள்ளலாரின் சத்திய வாக்கியம் ஆகும். அதில் ஒன்று “தேச ஆச்சாரம்” ஆகும். ஒழிக்க வேண்டிய ஆச்சாரமாக “தேசப் பற்று” இருக்கும் போது, ’நம் நாட்டிற்கு’ என எப்படி நம் வள்ளலார் சொல்லியிருப்பார்கள்?
மேலும் எதற்கு இது போல் சிந்திக்கிறீர்கள்? யார் எங்கிருந்து வந்தாலும் வள்ளலார் சொன்னதை உள்ளது உள்ளபடி எடுத்து சொன்னால் சரிதான். சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டியிருப்பவர்களால் வள்ளலாரின் கருத்துக்களை உள்ளது உள்ளபடியாக தர முடியாது. தமது சொந்த அனுபவங்களை வள்ளலாரின் நெறியோடு கலந்து பலர் தருவதால், சொல்லும் அவருக்கும், கேட்டுக் கொண்டியிருக்கும் நமக்கும் உண்மை காரியப்படாது என சத்தியமாக அறிதல் வேண்டும். நிற்க! நூல் மூலமாகவோ, கேட்பதின் மூலமோ எந்தொரு பயனோ உண்மையோ கிட்டாது. எல்லோருக்கும் அக அனுபவமே உண்மையாகும் என்கிறார் வள்ளலார்.

அன்பரே!
பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்.
தன்னை மதியாதிருத்தல்.
இவையில் நல்ல விசாரணை செய்வோம்.
நன்றி.
flight-image.jpg

flight-image.jpg

thinking-head.png

thinking-head.png

11 Comments
narayani julu
நன்றி அய்யா. நீண்ட காலம் இருந்த சந்தேகம் தீர்ந்தது. அருள் அவர்கள் பதில் சிறப்பு. தேச ஆசாரம் கூடாது என்ற நம் பெருமானிடம் நம் நாடு என்ற எண்ணம் இருக்காது.இப்படி
சொன்னவருக்கு அயல் நாட்டுக்காரரிடம் ஏதேனும் காரியம் ஆக வேண்டியிருந்திருக்கும். அக்காலத்தில் அன்னிப்பெசண்ட் மற்றும் சில அமைப்புகள் நம் பெருமானை போற்றினார்கள். APJ ARUL's கட்டுரைகள் ஏன் போஸ்ட் ஆகாமல் உள்ளது. சுய நலமின்றி உள்ளபடியாக எழுதும் சுத்த சன்மார்க்கியாக அவர்கள் உள்ளார்கள். THANNKS ALL - Dr.Narayani
Friday, January 20, 2017 at 08:24 am by narayani julu
Sivamani Gurunathan
சாதி ஆசாரம் கூடாது - என்ற நம் பெருமானிடம் 'முதலியார்' என்ற எண்ணம் இருக்காது. அப்படியென்றால் தொழுவூர் வேலாயுத முதலியார்
- என்று வருகின்றதே பேருபதேசத்தில். அதில், சாதியின் பெயர் வருவதால், பேருபதேசமும் பெருமானால் பேசப்பட்டது இல்லையோ?
Friday, January 20, 2017 at 15:57 pm by Sivamani Gurunathan
Sivamani Gurunathan
ஆறாம் திருமுறை /
"...ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா..."

"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி"
இவற்றில் மதம் இல்லையா?
Friday, January 20, 2017 at 16:10 pm by Sivamani Gurunathan
Sivamani Gurunathan
ஆறாம் திருமுறை / சத்திய அறிவிப்பு
என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. இங்கு தன்சாதியில் சாதி இல்லையா? அய்யா தெளிவு வேண்டும். நன்றி
Friday, January 20, 2017 at 16:18 pm by Sivamani Gurunathan
Sivamani Gurunathan
ஆறாம் திருமுறை / தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்
மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர்....இக்குல மாதரும் யானும்என் நாதர் இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது...பூரண நோக்கம் பொருந்தினை நீதான் எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
இங்கு, குலம் இல்லையா? குழப்பமாக உள்ளது! நன்றி...
Friday, January 20, 2017 at 16:24 pm by Sivamani Gurunathan
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
ஆரியம் முதலிய பாஷைகளில் என் மனம் செல்லவொட்டாது...தென்மொழி ஒன்றனிடத்தே என்மனத்தைப் பற்றச்செய்த தேவரீரது பெருங்கருணை...என்று குறிக்கிறார் எம்பெருமான்.அதை எப்படி எடுத்துக் கொள்வது? அவருக்கு நம் மொழியின் மேலும் அபிமானம் இல்லை என்று கற்பித்துக் கொள்வதா?மொழி ஆசாரம் என்று சொல்லி இதை இடைச்செருகல் என்பதா?
உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் எந்தப் பின்னடைவும் ஏற்பட்டு விடாது.
Saturday, January 21, 2017 at 00:40 am by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Sivamani Gurunathan
திருவுள வாக்குப், பலித்தது! பலித்ததுக்கொண்டிருக்கிறது!எக்காலத்தும் அது பலிக்கும். மேலை நாட்டவர் வந்தனர்! வருகின்றனர்! எக்காலத்தும் மென்மேலும் வருவார்கள்! இது பெருமான் வாக்கல்லாது, அப்படியே சித்திக்க வாய்ப்பில்லை! பேருபதேசத்தில், 'இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன்.' இது தேசாபிமானம் அல்ல! முகவரியாகச் சொல்லப்பட்டது ஆச்சாரம் ஆகாது. 'கருணயிலா ஆட்சி கடுகி ஒழிக' ஆம், அன்னியர் ஆட்சி ஒழிந்தது! இது நாட்டுப்பற்றல்ல. அருள் நீதி! ஆகவே, கடந்தகால நிகழ்வுகளை நாம் கேட்டதற்கு, நன்றி உரைக்காமல் போனாலும், தப்பாகப் பேசவேண்டாம்.
Saturday, January 21, 2017 at 17:44 pm by Sivamani Gurunathan
narayani julu
மன்னிக்கவும். கவிஞர் அய்யாவிடமிருந்து இத்தகைய பதிலை எதிர்பார்க்கவில்லை. வள்ளற்பெருமான் சொல்லிய ஆச்சாரங்கள் 13ல் மொழி ஆச்சாரம் கிடையாது. கட்டுரையில் அன்பர் ஒருவர் கேட்ட பதிலும் அதற்கு ஏபிஜெ அருள் (தங்களால் பாராட்டப்பட்டவர்) அளித்த பதில் மிக சரிதான். நீங்களே சொல்லுங்கள். பண்பாடு, இரக்கம், ஆன்மீக அறிவு இவையில் சிறப்பு இல்லாத ஆதிக்க உணர்வு படைத்தவர்களால் எங்ஙனம் உயர்வுடையதாகிய ஒரு நெறியின் சிறப்பை வெளிப்படுத்த முடியும்? அங்ஙனம் சொல்லப் பட்ட செய்தி வள்ளல்பெருமானால் சொல்லப்பட்டது என்று சொல்வது தவறானது என்று சொன்னதில் உள்ள விளக்கம் சரியே! தாங்களும் அவசரப்பட்டு...?? வள்ளற்பெருமான் சொன்ன உண்மையை கவிஞர் அய்யா, திருமிகு ஏபிஜெஅருள் மற்ற இங்குள்ள பெரியவர்களால் தான் முடியும்.
Sunday, January 22, 2017 at 00:56 am by narayani julu
sivadurai sivamayam
திரு சிவமனி சொல்வது முற்றிலும் சரி.ஆனால் இங்கு பேருபதேசத்தில் நீங்கள் குறிப்பிடும் வரிகள் மேல் பிரச்சனை இல்லை”. ஒரு பேஸ் புக்கில் ””நான் சொன்ன கேட்க மாட்டீங்க, அயல் நாட்டிலிருந்து (அமெரிக்கா உட்பட) வந்து எடுத்து சொன்னப் பிறகு தான் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுது நம் நாட்டிற்கு பெருமை வந்து சேரும்” என்று வள்ளலார் சொன்னதாக ஒரு புக்கின் பகுதிக்கு தான் அன்பர் கேட்டிருந்தார்” நீங்கள் சொல்வது வேறு. நீங்கள் சொல்வது போல் உலக எல்லா நாடுகளுக்கும் நம் சுத்த சன்மார்க்கம் பரவி வெளி நாட்டினர் வருகின்றனர். வரவேற்போம்.
Sunday, January 22, 2017 at 02:07 am by sivadurai sivamayam
Valluvar Vallar Mandram VVMCHENNAI
வள்ளற்பெருமான் அவர்கள் அருளியது வேறு பெருமான் சொன்னவற்றை குறிப்பு எடுத்து கொடுத்துள்ளது வேறு. முதலியார், பிள்ளை என்பவற்றில் நமக்கு ஏது உடன்பாடு?.சாதி, சமயம் பொய் என்று பெருமானார் சொன்னார்கள் என்று முதலியார், பிள்ளைகள் குறிப்பு எடுத்து தந்துள்ளேன் என்கிறார்கள் அய்யா. நமக்கு எந்தொரு வகையிலும் வள்ளல் பெருமான் குறிப்ப்ட்டுள்ள 13 ஆச்சாரங்ள் கூடவே கூடாது. அக்காலத்திலும், அதன்பின்பும் இருந்த பெரியவர்கள் நம் பெருமானாரை விரும்பினார்கள் அன்றி எவரும் சாதிப்பற்றையோ, சமயப்பற்றையோ விடவில்லை என்பதை காணலாம்.
Sunday, January 22, 2017 at 02:16 am by Valluvar Vallar Mandram VVMCHENNAI
Valluvar Vallar Mandram VVMCHENNAI
13 ஆசாரங்கள் குறித்து விளக்கமாக தெரிந்துக்கொள்ள கீழ்வரும் கட்டுரையில் காணலாம்:

http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020708B
Sunday, January 22, 2017 at 15:03 pm by Valluvar Vallar Mandram VVMCHENNAI