அருள்பாவலர் சக்திவேல் .வே
ஞானம் பயில..... முயல்வோரே!
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனாரின் அருள் ஜோதி ஞான நெறி வழிமுறை :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
★ திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனார் தான், தன் அகத்துள் உணர்ந்து - கண்டு - அனுபவித்த அருட்பெருஞ்ஜோதியை உலகத்தாரும் அனுபவிக்க வேண்டுமென விரும்பினார்கள்.

★அதற்காகவே சத்திய ஞான சபையை வடலூர் பெருவெளியில் அமைத்து ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்தார்கள்.

★◆>> பெருமனார் தன்னுள் கண்டு அனுபவித்த அருட்பெருஞ்ஜோதியை நாமும் காண வேண்டுமென்றால் .... நாம் என்ன செய்ய வேண்டும் ?°°°°° (திருஅருட்பா - உபதேசம் வழி நின்று சிந்திப்போமே !)

★1."நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடி இருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதி உஷ்ணத்தால் அல்லது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது".

★2."அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தால் தெரியும். அதை மனித தரத்தில் உண்டு பண்ணுதற்குத் தெரியாது ".

★3."அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும்" >>>>>[நண்பர்களே ....! இக்குறிப்பை நன்கு கவனியுங்கள்...]

★4."யோகிகள் வனம் , மலை , முழை முதலியவற்றிற்குப் போய் நூறு , ஆயிரம் முதலிய வருஷகாலம் தவஞ் செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக்கொள்ளுகிறார்கள்."

★5."இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக்கொள்ளுகிறதைப் பார்க்கிலும் , தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் , இதைவிடக் கோடி பங்கு , பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக்கொள்ளலாம்."

★6,"எவ்வாறு எனில் , ஒரு ஜாம நேரம் (ஒரு ஜாமம் = ஒரு முகூர்த்த நேரம் =1.30 மணிநேரம்) மனதில் இக விசாரமின்றிப் பரவிசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் , நாம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம்.".

★7."ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின் கண் பயிலுதல் வேண்டும் ".

★■◆●>>>என்று வள்ளல் பெருமனார் அருளியுள்ளார்கள்.

>>>>>இக்குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வது :

நாம் தினசரி 1.30 மணி நேரம் மட்டுமாவது இறை பற்றிய ஒருமையில் இருக்க வேண்டும். (அல்லது)

தினசரி 1.30 மணி நேரம் மட்டுமாவது அருட்பாக்களை பாராயணம் செய்ய வேண்டும்....

சாதாரண உலகச்சார விவாதங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பர - இறை பற்றிய சிந்தனையில் ஈடுபட வேண்டும்.

(கருத்துப் பதிவு : மன்னை அருள் பாவலர்)

Chitrambalam Ramaswamy
Excellant, I was debating about this, இறை உணர்வோடு நீண்ட நேரம் இருத்தலை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
Thursday, February 23, 2017 at 08:09 am by Chitrambalam Ramaswamy