அருள்பாவலர் சக்திவேல் .வே
திருஅருட்பா அமிழ்தில் ஒரு துளி.....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனார் அருளிய திருஅருட்பாவில் 5624-ஆம் பா இது

★அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை முன்னிலைப்படுத்தி பாடிய பாடல் இது.

◆வள்ளல் பெருமனார் தாம் பெற்ற பெரும் பேற்றை ; தானே வியந்து பதிவு செய்யும் பாடல் இது

➡"என்னைப் பொல் நோவாது நோம்பு நோற்றவர் ; இந்த உலகிலும் /எந்த உலகிலும் யாரும் இல்லை"

➡"மரணமிலா பெரு வாழ்வை / சாவா வரத்தை என்போல் பெற்றவரும் இ(எ)ந்த உலகிலும் யாரும் இல்லை"

➡"இறைப் பேரருளை என்னைப் போல் பெற்றவரும் இ(எ)ந்த உலகில் யாரும இல்லை"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நோவாது நோன்பெனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப் போல் சார்ந்தவரும் - தேவா நின்

பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்

யார் உளர் சற்றே அறை
[திருஅருட்பா - 5624]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶
இதே போன்ற கருத்தமைந்த வள்ளல் பெருமனாரின் வரிகள் வருமாறு :

★"சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தாரணியில் எனக்கிணை யார் என்று இயம்புவனே" (திருஅருட்பா5417)

★"யாராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே"
(திருஅருட்பா 3670)

★"மரணம் தவிர்தேன் என்று அறையப்பா முரசு" (திருஅருட்பா 5295)

★"பெற்றேன் என்றும் இறவாமை" (திருஅருட்பா 5486)

★"எமன் எனும் அவன் இனி இ(ல்)லை இலை மகனே!

எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே!"
(திருஅருட்பா 3702)

★"தந்தையை கண்டேன் நான் சாகா வரம் பெற்றேன் சிந்தை களித்தேன்.. "
(திருஅருட்பா 4903)

★"என் அடுத்தோர் கூடி அழாத வண்ணம் சாகா வரம் தந்திட்டான்" (திருஅருட்பா 5510)

★"சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திச்

சாகா வரத்தையும்தந்து மேன்மேலும்...."
(திருஅருட்பா 4615;அகவல் வரி -1568)

★"இறவா வரம் அளித்து என்னை மேலேற்றிய
அற வாழிஆம் தனி அருட்பெருஞ்ஜோதி"
(திருஅருட்பா 4615; அகவல் 158)

▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶>>>ஆம் >>>
திருஅருட்பாவை கசடறக் கற்க கற்க...
➡இராமலிங்கம் என்பவர் அருட்பிரகாச வள்ளல் பெருமனாராய் உயர்ந்ததை நாம் உணரலாம்

➡திருஅருட்பா எனும் ஞான களஞ்சியத்தில் ஞான நெறியின் வழிமுறை மட்டுமல்லாது அருட்பிரகாசவள்ளல் பெருமனார் நடந்து சென்ற வழியையும் நாம் அறிந்துகொள்ளலாம்.......

⏩➡▶வாருங்கள் ! திருஅருட்பாவைக் கசடறக் கற்போம்! தமிழ் ஞான சித்தர் நெறியை மீட்டுருவாக்கம் செய்வோம்!
(கருத்துப் பதிவு : மன்னை அருள்பாவலர்)