Vallalar Space Team - Global
வள்ளலார் வெளி இணையத்தின் கண்காட்சி மற்றும் முகாம் ‍ நாள்: 25.5.2017
வள்ளலார் வெளி இணையத்தின் கண்காட்சி மற்றும் முகாம் ‍

நாள்: 25.5.2017

இடம்: இசைவிழா அரங்கம், வடலூர் பெருவெளி.

 

வடலூர் பெருவெளியில் அருட்பாஇசை சங்கம் சார்பாக 3 நாட்களிசைவிழா நடைபெற உள்ளது, அதில் ஒரு நாள் நிகழ்வாக நமது பெருவெளி இணைத்தின் சார்பாக இணையக் கண்காட்சி மற்றும் முகாம் ஆகியவை இசைவிழா அமைப்பாளர்களின் இசைவுடன் நடைபெற உள்ளது.

கண்காட்சி மற்றும் முகாம் நோக்கம்/பயன்:

சன்மார்க்கம்/வள்ளலார் தொடர்பான பொதுத் தன்மை உடைய மென் வடிவங்களை இசைவிழாவில் கலந்து கொள்ளும்  அன்பர்களுக்கு இலவசமாக வழங்குதல் மற்றும் காட்சிப் படுத்தல்.

மென் வடிவங்கள்:

  1. திருஅருட்பா பாடல்கள்
  2. திருஅருட்பா உரைநடைப் பகுதி ஒலி நூல்கள் Audio Book (முழுவதும்)
  3. வள்ளலார் & திருஅருட்பா காட்சிப்பதிவுகள்
  4. வள்ளலார் & திருஅருட்பா குறித்த மென் நூல்கள்
  5. வள்ளலார் & திருஅருட்பா குறித்த இணைய தளங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
  6. வள்ளலார் & திருஅருட்பா இணைய இதழ்கள்
  7. வள்ளலார் & திருஅருட்பா குறித்த அறிஞர்களின் சொற்பொழிவுகள்.
  8. திருஅருட்பா 6 திருமுறைகளையும் உள்ளடக்கிய ஆண்ட்ராய்டு செயலி

முதலியவை மென் வடிவில் வழங்கப்படும், இசைவிழாவில் கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்கள் கைபேசி (Smart Phone) / பதிவட்டை (மெமரி கார்டு/ Memory Cord)/ விரலி (பென்டிரைவ் - PenDrive) ஆகியவற்றில் மேற்கண்டவற்றை பதிவேற்றிக்கொள்ளலாம்.

கைபேசி (Smart Phone) / பதிவட்டை (மெமரி கார்டு/ Memory Cord)/ விரலி (பென்டிரைவ் - PenDrive) போன்றவற்றை தங்களுடன் கொண்டுவரவும்)

சன்மார்க்க சங்கங்கள் அதன் செயல் பாடுகள் குறித்து இணையதளத்தில் வெளியிட விரும்புவோர் தங்கள் தகவல்களை இங்கு பதிவு செய்துகொள்ளலாம் . அந்த தகவல்கள் வள்ளலார் இணையத்தில் வெளியிடப்படும்.

அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அன்போடு வேண்டுகின் றோம்

அன்புடன்,

வள்ளலார் வெளி இணையக் குழுவினர், 

மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்க!

07411275938/ 09840899581 /09952654143
(ஆனந்த‌ பாரதி / இரவிக்குமார் சிவமணி/ சந்துரு ராஜசேகர்).


தன்னார்வ தொண்டர்களை வரவேற்க்கின்றோம்:

இந்த முகாமில் கலந்து கொண்டு தொண்டு செய்ய நினைக்கும் அன்பர்கள் தங்கள் மடிகணிணியுடன் முகாம் நடைபெறும் இடத்திற்க்கு வருகை தந்து எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: அனுமதி வழங்கிய
இசைவிழா அமைப்பாளர்களுக்கு.

Vallalar Songs Distibution Camp - with Phone number.jpg

Vallalar Songs Distibution Camp - with Phone number.jpg

6 Comments
Daeiou  Daeiou.
அருமையான சந்தர்ப்பம் இதுவாகும். நகல் எடுக்க வேண்டுமெனில், வரும் அன்பர்கள், எத்தனை ஜி.பி. மெமரி கார்டு கொண்டு வர வேண்டும் என்ற விவரத்தையும் தெரிவிக்கலாமே...
Monday, May 22, 2017 at 04:22 am by Daeiou Daeiou.
Anandha Barathi
Ayya Thanks,

Minimum we required 4 GB Memory card or Pen drive and they can copy in their Smarts phones also.

Thanks.
Monday, May 22, 2017 at 06:34 am by Anandha Barathi
Manohar Srinivasan
What is the name of the Vallalar App?
Tuesday, May 23, 2017 at 23:04 pm by Manohar Srinivasan
Anandha Barathi
Hi Monohar,

You can search in google play store or I phone store with string "ThiruArutpa" you can find apps there.

Thanks.
Tuesday, May 23, 2017 at 23:43 pm by Anandha Barathi
Daeiou  Daeiou.
அன்பர் திரு ஆனந்த பாரதி அளித்த தகவலின்படி, 4 ஜி.பி பென் ட்ரைவ்/4 ஜி.பி. மெமரி கார்டு, ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றில், தேவையான அளவில், நகல் எடுத்துக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டப்படுகின்றது. இசை விழா அரங்கிற்கு அருகாமையில், இவர்கள், இப் பணியினை, இலவசமாக அன்பர்களுக்குச் செய்து கொடுக்கவுள்ளனர்.
Wednesday, May 24, 2017 at 12:43 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
இந்த அறிவிப்பு...இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டதைப் பார்த்தும், இசை விழாவில் பங்கேற்க வந்தபோது கேள்விப்பட்டும், பல சன்மார்க்க அன்பர்கள், நகலினைப் பெற்றனர். அன்பர் திரு ஆனந்த பாரதி மற்றும் அவரது சகாக்கள்..இலவசமாக இதனை நகல் எடுத்துக் கொடுத்தமைக்கு அனைவராலும் பாராட்டப்பட்டனர். அவரது தொண்டு மென்மேலும் தொடர..வாழ்த்துக்கள்...
Thursday, May 25, 2017 at 12:39 pm by Daeiou Daeiou.