Nalini ram பாத்திமா
கேள்வி
ஐயா ஏகன்  ஒருவனென்ற கூற்று உண்மை இதை கூறும் வேறு மார்கத்தினின்றும் பயனிப்பது தவறில்லை அல்லவா மேலும் இறப்பிற்கு பின்பு ஆன்மாவின் நிலை யாது?
3 Comments
manohar kuppusamy
anma/athma again going to take another birth according to the present karma.
pls.send yourmail id for details discussions
Tuesday, December 12, 2017 at 04:47 am by manohar kuppusamy
Daeiou  Daeiou.
ஆன்மா ஏகமே, அநேகம்.

பரமான்மபதி ஒருவரே நித்தியமாக, சத்தியமாக உள்ளவர். ஆதலின், அவர் ஏகம் என்பது எல்லோரும் அறிவர். அந்த ஏக நாயகனே, எங்கும் எக்காலத்தும், ஒவ்வொரு ஆன்மாவாயும் இருந்து கொண்டு., பலப்பலவாகிய தேகங்களை ஏற்பதும், விடுப்பதுமாயிருக்கின்றார் என்பதும் உண்மையே. ஆகையால் ஆன்மாக்கள் அனந்தமாய்த் தோற்றுகின்றன.

திருவருட் பூரணத்தாலே ஓர் ஆன்மா, பரமான்மாவோடு இரண்டற்றிலங்கும் சுத்த தேக வாழ்வு பெறுகின்றபோது, ஏக பரானந்த நிலையே அனுபவிக்கின்றதாகும். அதாவது தானே, எங்குமாய், உண்ணின்று அனகானந்த வாழ்வு கொண்டு விளங்குவதாய் அனுபவிக்கப்படுகின்றதாம். அவ்வான்மா, இந்நிலையில் ஏகானுபவங்கொண்டு திகழலால், தானே எல்லா ஆன்மாவாயும், தன்னை அன்றி, அயலாகப் பிறிதொன்று இல்லாததாகவும் அறிகின்றதாம். இதனால், இதுவரை தோன்றி இருந்து மறைது போன எல்லா ஆன்மாக்களும், இனியும் அளவு கடந்த நெடுங்காலத்தில் தோன்றுகின்ற எண்ணிலி கோடி ஆன்மாக்களும் தன்னை அன்றி மற்ற ஒன்றாக இல்லை எனத் தெளிந்து கொண்டு விளங்குகின்றான் சுத்த சன்மார்க்கி. முன் வந்த பலவாகிய ஆன்மாக்களில், தானே அது அதுவாய் வாழ்ந்து பெற்றுத் திரட்டிக் கொண்ட அருளனுபவத்தால் இன்று அழியாத சுத்த தேகம் ஏற்படுகின்றது.

இராமலிங்க அடிகளார் என்று விளங்கிய ஓர் ஆன்மாதான், இந்தச் சுத்த தேக அனுபவம் பெற்று, திருவருட் பிரகாச வள்ளலார் என்றாகி விளங்கிக் கொண்டிருக்கின்றதாம். நம் பரமான்ம பதியே, இராமலிங்க ஆன்மாவாய்த் தோன்றி, திருவருட் பிரகாச வள்ளலாராகித் தன்னையே எங்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றதாகும். திருவருட் பிரகாச வள்ளல் வடிவம் சுத்த தேக நிலை. இனி, ஒவ்வொரு ஆன்மாவும் இச் சுத்த தேக நிலை பெற்றுத் திகழப்போவது திருவருட் பெருஞ்ஜோதி பதியின் பேராணையாகும்.

ஆகவே, நம் சுத்த சன்மார்க்கத்தில் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதிபதி ஏகராய் இருந்து கொண்டு, அநேகமாம் சுத்த சன்மார்க்கிகளாய் வெளிப்பட்டுத் திகழப் போகின்றது சத்தியமாம். இவ்வுண்மையை அறிந்து, இந்நெறியை மேற்கொண்டு எல்லோரும் ஒத்து வாழ்ந்தால் உலகெல்லாம் பெரு நன்மையும் பேரின்பமும் பெறும். பெற்றுத்தான் ஆகவேண்டும். இது திருவருள் ஆணை.

(பரமான்மபதி என்ற நூலிலிருந்து...ஆசிரியர்..சுவாமி சரவணானந்தா.)
Thursday, December 14, 2017 at 08:52 am by Daeiou Daeiou.
Ramalingam Natarajamoorthy
ஏகன் ஒருவரென்று கூறினாலும்
அவருடைய தன்மை என்ன
நம்முடைய நிலைமை என்ன
நாம் அடைய வேண்டியது என்ன
அதனை அடைவது எவ்வாறு
என்ற வழிமுறைகள் தெளிவாக உள்ள மார்க்கத்ததை பின் பற்றுவது நன்று
Ramalingam Natarajamoorthy
Friday, December 15, 2017 at 04:03 am by Ramalingam Natarajamoorthy