thiruma valavan
வள்ளலாரைப் பற்றி வேதவியாசர்
வள்ளலார் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவர்.  ஏதோ  அவர் சைவ சமயத்திற்கு மட்டுமே உரித்தானவர் என்றும் சன்மார்க்கத்தில் சைவர்கள் மட்டுமே நடத்தவேண்டுமென்றும் இருக்க வேண்டுமென்றும் நினைக்கின்றனர்.  இது முற்றிலும் தவறு.

வள்ளலாரைப் பற்றியும் சாகாக் கல்வியைப் பற்றியும் பகவத் கீதையில் கீக்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

எந்த மனிதன் எல்லாமறிந்தவரும் அநாதியானவரும் (தொன்மையானவரும்)(வாழையடி வாழை) எல்லாவற்றையும் ஆள்பவரும் நுண்ணியதைக் காட்டிலும் மிகவும் நுண்ணியரானவரும் எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவரும் சிந்தனைக்கெட்டாத வடிவுடையவரும் சூரியனைப்போன்று எப்பொழுதும் சைத்தன்ய பிரகாச வடிவானவரும் அவித்யைக்கு மிகவும் அப்பாற்பட்டவரும் சுத்த சத் சித் ஆனந்தமயமான இறைவனை எவன் நினைத்துக்கொண்டிருக்கின்றானோ அந்த பக்தியோடு கூடிய மனிதன் பரலோகத்தில் பிரவேசிக்கும் தருவாயில் யோகத்தின் வலிமையால் புருவங்களின் மத்தியில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, மேலும் அசையாத மனத்தால் நினைத்துக்கொண்டு, அந்தத் திவ்ய ரூபத்தோடு மேலான பரமாத்வையே அடைகிறான்.(அத்தியாயம் 8 - சுலோகம் 9 & 10).
தில்லை திருமா - 9840348094

Thangavel Gangadharan
வள்ளலாரைப் பற்றியும்,  மரணமிலாப் பெறுவாழ்வினைப் பற்றியும் பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கும் நபருக்கு ஓர் கேள்வி.
வள்ளல் பெருமான் ஸ்ரீமுக வருஷம் , ஐப்பசி மாதம் 7 - ஆம் தேதி, புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே ,திருவாய் மலர்ந்தருளிய  பேருபதேசக் குறிப்புகளில்  உள்ள கீழ்கண்டவை  : 
01. இதற்கு மேற்பட நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லக்ஷியம் வைக்கவேண்டாம்.
02. இதுபோல் , சைவம் , வைணவம் முதலிய சமயங்களிலும்,  வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்கவேண்டாம்.
03. அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்க வேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கிறது , வாசகப் பெருவிண்ணப்பதாலும், " இயல் வேதாகமங்கள் புராணங்கள் " என்ற அருள் விளக்க மாலைப் பாசுரத்தால் உணர்க " 
எனும் செய்திகள் நீங்கள் எடுத்துக்காட்டும் பகவத் கீதையில் இருப்பின் அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.
மேலும் திருவருட் பெருஞ்ஜோதி அகவல்  கீழ் கண்ட வரிகள்  நீங்கள் கூறும் கருத்திற்கு வலு சேர்க்க பகவத் கீதை ஸ்லோகங்களை  உலகத்திற்கு தெரிவிப்பது நலம்.
"  சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய் 
   அமையும் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி "     (61 - 62)
" சாதியும் மதமும் சமயமும் காணா  
ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி " (116 - 117)
" சாதியும் மதமும் சமயமும் பொய்என  
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி " (211 - 212)
" சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த 
  அமயம்  தோன்றிய அருட்பெருஞ்ஜோதி "   (293 -294) 
 
இது போன்ற கருத்துக்கள் உள்ள ஸ்லோகங்கள் பகவத் கீதையில் இருப்பதை சுட்டி காட்டி உலகத்திற்கு உங்கள் கருத்தை நிலை நிறுத்தவும்.
Tuesday, December 10, 2019 at 10:59 am by Thangavel Gangadharan