balamurugan
8.12.2019 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு.
வள்ளலார் வழி வாழ்வியல் சத்துவிசாரம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

இன்று ஞாயிற்றுக்கிழமை (08.12.2019) காலை 9.30 மணி முதல் மாலை 2 மணி வரை இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதிக் கோட்டைமேட்டிலுள்ள நம் வள்ளலார் வாழ்வியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வள்ளற்பெருமான் அருளிய உயரிய சத்துவிசாரம் மற்றும் உண்மை வாழ்வியல் பயிற்சியானது நல்லபடியாகத் திருவருளால் நடைபெற்றது.

அருட்பா அவதானி சன்மார்க்கத்திரு
ஜெகநாதன் அவர்களின் தலைமை மாணாக்கரான கோட்டையூரைச் சேர்ந்த சன்மார்க்கத்திரு இராசு அவர்கள் வள்ளலார் காட்டிய வாழ்வியல் என்ற தலைப்பில் ஆற்றிய 2.15 மணி நேர சொற்பொழிவானது மிகச்சிறப்பாக அமைந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அருளன்பர்கள் அனைவருக்கும் மதிய உணவு உபசரிப்பும், பொற்றிலைக் கையாந்தகரை மற்றும் முக்கூட்டுச் சூரணத்தால் தயாரிக்கப்பட்ட தேவ அமுதங்களும் திருஅருளால் வழங்கப்பட்டது.

இது போன்ற அருள் நிகழ்வானது வரும் 22.12.2019 -ம் நாளன்று மீண்டும் திருவருளால் நடக்கவுள்ளது.

அன்று அந்நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து அருட்சுகம் அடையவேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி, வணக்கம், சுபம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா விரதம் இக்குவலயமெலாம் ஓங்குக!

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!

பக்கத்திலுள்ள மாவட்டத் தலைநகரங்களிலிருந்து கமுதிக் கோட்டைமேட்டிலுள்ள நம் வள்ளலார் வாழ்வியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வருவதற்கு வழித்தடங்கள;

1. மதுரை - மானாமதுரை - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன் - கமுதிக் கோட்டைமேடு

2. விருதுநகர் - அருப்புக்கோட்டை- கல்லூரணி - ரெட்டியார் பட்டி - கானா விளக்கு - கமுதி - கமுதிக் கோட்டைமேடு

3. சிவகங்கை - மானாமதுரை - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன் - கமுதிக் கோட்டைமேடு

4. இராமநாதபுரம் - பரமக்குடி - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன் - கமுதிக் கோட்டைமேடு

இவண்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
கமுதி - கோட்டைமேடு
கமுதி வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
அஞ்சல்: 623604
இமெயில்: durai.america@yahoo.com

அலைபேசி;
91 96262 73263 (சன்மார்க்கத்திரு கோபால் அய்யா - தாசில்தார் ஓய்வு)

+1 409 338 0986 (சன்மார்க்கத்திரு துரை சாத்தனன்)

 

vlcsnap-2018-12-28-05h52m13s801.png

vlcsnap-2018-12-28-05h52m13s801.png