Gangadharan Thangavel
வள்ளலாரைப் பற்றியும்,  மரணமிலாப் பெறுவாழ்வினைப் பற்றியும் பகவத் கீதை
வள்ளலாரைப் பற்றியும், மரணமிலாப் பெறுவாழ்வினைப் பற்றியும் பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கும் நபருக்கு ஓர் கேள்வி.

வள்ளல் பெருமான் ஸ்ரீமுக வருஷம் , ஐப்பசி மாதம் 7 - ஆம் தேதி, புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே ,திருவாய் மலர்ந்தருளிய பேருபதேசக் குறிப்புகளில் உள்ள கீழ்கண்டவை :

01. இதற்கு மேற்பட நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லக்ஷியம் வைக்கவேண்டாம்.
02. இதுபோல் , சைவம் , வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்கவேண்டாம்.
03. அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்க வேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கிறது , வாசகப் பெருவிண்ணப்பதாலும், " இயல் வேதாகமங்கள் புராணங்கள் " என்ற அருள் விளக்க மாலைப் பாசுரத்தால் உணர்க "

எனும் செய்திகள் நீங்கள் எடுத்துக்காட்டும் பகவத் கீதையில் இருப்பின் அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.
மேலும் திருவருட் பெருஞ்ஜோதி அகவல் கீழ் கண்ட வரிகள் நீங்கள் கூறும் கருத்திற்கு வலு சேர்க்க பகவத் கீதை ஸ்லோகங்களை உலகத்திற்கு தெரிவிப்பது நலம்.
" சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
   அமையும் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி " (61 - 62)
" சாதியும் மதமும் சமயமும் காணா
   ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி " (116 - 117)
" சாதியும் மதமும் சமயமும் பொய்என
   ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி " (211 - 212)
 " சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த
   அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி " (293 -294)

இது போன்ற கருத்துக்கள் உள்ள ஸ்லோகங்கள் பகவத் கீதையில் இருப்பதை சுட்டி காட்டி உலகத்திற்கு உங்கள் கருத்தை நிலை நிறுத்தவும்.