Vallalar Universal Mission Trust   ramnad......
சீவர்கள் முன்தேகத்திலே செய்த புண்ணிய பாவ கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி என்று அறிய வேண்டில்:-
சீவர்கள் முன்தேகத்திலே செய்த புண்ணிய பாவ கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி என்று அறிய வேண்டில்:-

ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப்பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டுக்குக் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் அந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல, ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் பாவ கர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோது அந்தப் பாவ கர்மங்கள் அந்தத் தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென்றும் புண்ணிய கர்மங்களும் இப்படியே என்றும் அறியவேண்டும்.