Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
25.5.2022 தருமச்சாலை துவக்க நாள் விழா..இலங்கை, மலேசியா, இந்தியா அன்பர்கள், ஜூம் மீட்டிங் மூலம் திரு அருட்பா பதிகங்கள் பாராயணம் மற்றும் விளக்கவுரைகள் நிகழ்த்தியது.
25.5.2022 அன்று, வடலூரில் தருமச்சாலை துவக்க நாள் விழா.மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அது போன்றே, இலங்கை, மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்தும், சன்மார்க்க அன்பர்கள்,(இந்திய நேரம்) காலை 3.30 மணி முதல், காலை 9.30 வரையில், திரு அருட்பா பாடல்கள் பாராயணம் செய்தனர். அதற்குப் பின்னர், திரை விளக்கம் குறித்து, மூத்த சன்மார்க்க சீலர்கள், பலரும் விஞ்ஞான பூர்வமாகவும், தமது அனுபவம் வாயிலாகவும் விளக்கங்களைத் தெரிவித்தனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்கள்.

1) திரு சந்தர் வெங்கடாசலம் குடும்பத்தினர். மலேசியா
2) டாக்டர் திருமதி செல்வ மாதரசி, அவருடன் இருவர். மலேசியா அவருடன் மற்றும் பலரும் பேசி விளக்கமளித்தனர்.
3) திரு அ.இராமானுஜம், நாராயணபுரம், மதுரை, இந்தியா.
4) திரு கேதீஸ்வரன், அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.

சத்திய தருமச்சாலையினை வள்ளற் பெருமானால் 153 ஆண்டுகளுக்கு முன்னர், வடலூரில் தோற்றுவித்ததன் நோக்கம் குறித்து, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்டிருந்த (சத்திய ஞான சபை தத்துவ விளக்கம்) என்ற நூலில் இருந்து முக்கியமான பகுதியினை, மதுரை சன்மார்க்க அன்பர் திரு அ.இராமானுஜம் அவர்கள், படித்து அனைவருக்கும் விளக்கினார்.

மற்ற திரு கருப்பையா என்ற மூத்த சன்மார்க்க அன்பர், நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
IMG-20210620-WA0036.jpg

IMG-20210620-WA0036.jpg

Download: