அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்களை பற்றி, பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுதம் அவர்கள் வள்ளல் பெருமான் மீது பல பதிகங்கள் பாடினார்கள் அந்த பதிகங்களை தொகுப்பு "திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு" என்று அழைக்கப்படுகின்றது. அந்த நூல் பல சிறப்பான பதிகங்களை கொண்டது, இந்த நூலை தொழுவூர் வேலாயுதம் அவர்களின் மகன் திருநாகேஷ்வரன் அவர்கள் வெளியிட்டார்கள், மீண்டும் அன்னூல் பதிப்பிக்கபடவில்லை, வரலாற்று சிறப்பு மிக்க அப்பதிக தலைப்புக்கள் சில :
1. திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி ,
2. திருஅருட்பிரகாச வள்ளலார் சதபங்கி,
3. திருஅருட்பிரகாச வள்ளலார் தசபங்கி,
4. திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி விண்ணப்பம் ..
முதலியனவாகும்.
சதபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் ஆனால் அது நூரு பொருளை தரும், அதுபோல
தசபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் அது பத்து பொருளை தரும், இன்னும் பல சிறப்பான பதிகங்களை தமிழிலும் வடமொழியிலும் வள்ளல் பெருமான் மீது அவர் பாடியுள்ளார்..
மிக விரைவில் வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம் அதை உங்களுக்கு வழங்கும் என்பதை
அன்போடு அறிவிக்கிறோம்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
Thanks for your interest, it is the old book and printed format; I have to compile them and type all the poems into computerized format, and it is a time consuming process as such. So soon it will be done and posted here in VallalarSpace.
Thanks.
வணக்கம்.
It is complete in PDF format? Is it possible to reprint the book. I need this book.
Thanks.
This work is going to finish on next week, after finishing the work we must upload the PDF version here.
Thanks.
திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு நூலின் முதல் நான்கு பகுதிகளை அன்பர்கள் நமது இணையதளத்தின் தற்பொழுது படித்து பயன்பெறலாம்.
1 திருஅருட்பா வரலாறு (மூலமும் - உரையும்)
2 சரணமஞ்சரி
3 அருள்நாம மந்திராமிர்தம் & திவ்வியநாமாமிர்தம்.
4 தச பங்கி.
வள்ளல் பெருமானார் மீது தொழுவூர் வேலாயுத முதலியார் பாடிய திருப்பள்ளி எழுச்சி பாடல் மற்றும் விளக்கத்தை இங்கு விரைவில் அன்பர்கள் காணலாம்!