DAEIOU - தயவு
31.7.2019 தாணிப்பாறை ஜோதி சுந்தர மகாலிங்கம் ஆடி அமாவாசை அன்னதான விழா.
வரும் 31.7.2019 அன்று புதன் கிழமை ஆடி அமாவாசை அன்று, அன்னதானம் நடைபெறும். 30.7.2019 செவ்வாய், 31.7.2019 புதன், 1.8.2019 வியாழன் ஆகிய 3 தினங்களில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்படும். அன்பர்கள் கலந்து கொண்டு, அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG_20190719_132609.jpg

IMG_20190719_132609.jpg

DAEIOU - தயவு
21.7.2019 மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெறல்.
திருமதி ஏ.ஆர். மஹாலக்ஷ்மி அவர்களின் இல்லத்தில், 21.7.2019 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி அளவில் துவங்கி சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சன்மார்க்க அன்பர்கள் தவறாமல் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

vlcsnap-2018-08-11-16h39m35s561.png

vlcsnap-2018-08-11-16h39m35s561.png

Gangadharan Thangavel
Vallalar Award.
We thank sanmarga devotees who earnestly made efforts to present the request for declaring an award in the name of Vallalar at appropriate level. We thank the Dept of Tamil culture and govt of Tamilnadu.

T.Gangadharan

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 21 ஜூலை 2019 : “அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்”
ஞாயிறு நிகழ்வு 21 ஜூலை 2019 நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

July22.jpg

July22.jpg

DAEIOU - தயவு
18.7.2019 முதல் 28.7.2019 வரையில் கோயம்புத்தூரில் புத்தக விழா..சன்மார்க்க ஸ்டால்.
மேற்காணும் புத்தக விழாவில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகள் அடங்கிய புத்தகங்கள், ஸ்டால் எண்.29ல் விற்பனை செய்யப்படுகின்றன. அன்பர்கள் வாங்கி பயன்பெற வேண்டப்படுகிறது.

IMG_20171002_123259.jpg

IMG_20171002_123259.jpg

DAEIOU - தயவு
வள்ளலார் விருது..சட்டசபையில் அறிவிப்பு.
IMG_20190719_101806.jpg

IMG_20190719_101806.jpg

saravanan ganesan
good
2 days ago at 08:41 am by saravanan ganesan
h balaji
அசைவம் உணவு உண்பவர்களுக்கு சைவ உணவு அன்னதானம்?
அசைவ உணவு பரிமாறும் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு கல்வி உதவி செய்வதற்காக சென்றிருந்தோம். அங்கேஅன்னதானம் செய்ய உதவலாம் என்று நினைக்கும் பொழுது மனம் ஏற்கவில்லை.என்னுடைய எண்ணம் சரிதானா?

3 Comments
SOULMATE S
ஒரு காலத்தில் அசைவ உணவு சாப்பிடும் மிருகமோ அல்லது மனிதனோ, சில மணி நேரம் உணவு இல்லாமல் தவித்தபோது, அதை கண்ட நீங்கள் அந்த சீவர்களுக்கு அன்னதானம் செய்வீர்களா அல்லது மாமிசம் உண்பவை என்று எண்ணி யோசிப்பீர்களா மற்றல்லது அவர்கள் அசைவர்கள் என்று எண்ணி துன்பப்படட்டும் என்று விட்டுச்செல்வீரா...

அதாவது நீங்கள் செய்யும் அன்னதானத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டால், செய்யலாமே.... அசைவம் சாப்பிட்டவர்கள் உங்களால் ஒரு வேளை சைவ உணவு சாப்பிட்ட புண்ணியர்கள் ஆகட்டும்.


உங்களுடைய அன்னதானத்தை அவர்கள் வேண்டாம் என்று கூறி உதாசீனப்படுத்தினால், நீங்கள் அன்னதானமோ, பணமோ அல்லது மற்றை எதுவம் செய்யாமல் அவ்விடம் விட்டு வருவது நல்லது.
5 days ago at 02:58 am by SOULMATE S
Natarajan Subbiramani
அய்யா... நீங்கள் சைவ உணவை அன்னதானம் செய்யும் போது தயக்கம் ஏன்? அடுத்தவர் பசிப்பிணி தீர்ப்பதே நம் நோக்கம் அல்லவா. வேண்டுமாயின், அந்த காப்பக நிர்வாகத்திடம் சைவ உணவின் மகத்துவத்தை எடுத்துரைத்து நன்வழிப்படுத்தலாம்
5 days ago at 10:43 am by Natarajan Subbiramani
balaji h
தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி ஐயா. எனக்கு ஜீவகாருண்யம் பற்றி போதிய தெளிவு இல்லாமை தான் இந்த மன குழப்பத்திற்கான காரனம் என்று கருதுகிறேன். பசி என்று வருபவர்கள் சைவமோ அசைவமோ என்ற பேதம் பாராமல் நாம் அன்ன விரயம் செய்து வருவோம்.
3 days ago at 09:37 am by balaji h
DAEIOU - தயவு
3.8.2019 மதுரை புட்டுத்தோப்பு சன்மார்க்க வழிபாடு.திரு அருட்பா இன்னிசை..
IMG_20190719_132653.jpg

IMG_20190719_132653.jpg

DAEIOU - தயவு
28.7.2019 மதுரை திருவாதவூரில் சன்மார்க்க விழா நடைபெறல்.
IMG_20190719_132625.jpg

IMG_20190719_132625.jpg

DAEIOU - தயவு
17.7.2019 வடலூரில் சன்மார்க்க மதுரை மாவட்டக் கட்டிடம் கட்ட தொகை அளித்தவர்கள்.
சோளவந்தான் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி, வடலூரில் மதுரை மாவட்ட அன்பர்கள் தங்குவதற்கு கட்டிடம் கட்டுவதற்கு, ரூ.10.000/- நிதி அளித்துள்ளார். 17.7.2019 அன்று, இந் நிதியை, மாவட்ட சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் வசம் ஒப்படைத்தார்.IMG-20180617-WA0003.jpg

IMG-20180617-WA0003.jpg