அறுபத்து நான்கு எழு கோடி சித்தகளும் வந்து அடிபணிந்து, நம் வள்ளல் பெருமானை தொழும், நம் வள்ளல் பெருமான் அந்த சித்திகளை காருண்யா செயல்களுக்கும், ஞானசபையை உருவாக்கவும் பயன்படுத்தினாரே தவிர தனக்கென பயன்படுத்தியது இல்லை.
அம்பாபுரத்தைச் சேர்ந்தவர் வேம்பு அய்யர். நம் வள்ளல் பெருமான் ரசவாத வித்தையை சில சமயங்களில் செய்வார், இதை கண்டுவந்த வேம்பு அய்யர், தானும் அவ்வாறு செய்யலாம் என்ற ஆசை கொண்டு
ரசவாத வித்தையில் தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்ற மனத்துணிவுடன் மருந்தை, இரும்புத் துண்டில் தோய்த்து நெருப்பின்மீது வைத்தார். நெருப்பை நன்றாக ஊதும் போது மருந்தினால் ஏற்பட்ட புகை, வேம்பு ஐயரின் கண்களை எரியச் செய்தது.
கைகளால் கண்களைக் கசக்கிவிட்டு, இமைகளைத் திறந்தார், அவரால் எதையுமே பார்க்க முடியாதபடி கண்கள் குருடாகிவிட்டன. வள்ளலாரிடம் செல்லத் துணிவின்றி, பார்வையை மீண்டும் பெற பல மருத்துவர்களிடம் சென்றார். பலன் ஏதுமில்லை. கையிலிருந்த பொருள் கரைந்ததுதான் கண்ட பலன்.
வேம்பு ஐயரின் உள்ளத்தில் தாம் செய்த தவறு உறுத்திக்கொண்டே இருந்தது. முடிவில் வள்ளலாரிடமே சென்று தவறுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று தீர்மானித்தார். வள்ளலாரின் இருப்பிடம் சென்றார். அவர் தம் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினார். தாயுள்ளம் கொண்ட தயாபரரான வள்ளலார் வேம்பு ஐயரைத் தூக்கினார். தமது கையிலிருந்து செம்பு நீரை அவரது முகத்தில் தெளித்தார். உடனே இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் ஐயர், தம்மெதிரே காட்சி தந்த வள்ளலாரை தரிசித்து மகிழ்ந்தார். தம்மை மன்னித்து அருள் புரிந்த வள்ளலாரை போற்றிப்பணிந்தார்.