Maha Mandhirapeedam
மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-2

மெய் ஞானத்தை அடையும் வழி

பகுதி-2

மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-1-ல் பிரபஞ்சத்தைப் பற்றியும் ஆண்டவரின் தன்மை புராண கடவுளுக்கு ஒப்புநோக்குகையில் எந்த அளவு உயர்ந்தது என்பதை சுருக்கமாகசத்விசாரம் செய்தோம்.



அடுத்த கட்டமாக பகுதி-2-ல் மெய் ஞானத்தை அடைவதற்கு செய்யவேண்டிய செயல்பாடுகளை பற்றியும் அதற்கு

செலவாகக்கூடிய காலத்தின் அளவுகளையும் ஆய்வு செய்வோம்.



சன்மார்க்கத்தில் மெய்ஞானம் என்பது சாதக நிலை (பயிற்சி நிலை) சாத்திய நிலை (அடைவு நிலை என்று இரண்டு
பகுதிகளாக உள்ளது. சன்மார்க்கத்தின் மூலமாக மெய்ஞானம் அடைய விரும்புவோர் எந்த வகையான பயிற்சிகளை

மேற்கொண்டு அடையலாம் என்பதையும் பார்ப்போம்.



சாதக நிலையிலிருந்து சாத்திய நிலையடைய விரும்புவோர் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை
முதலில் கைவிடவேண்டும். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் 5 மணிநேரம் முதல் 8
மணிநேரம் வரை தூக்கத்திற்காக செலவழிக்கிறார்கள் நேரம் போதவில்லை என்று கூறுபவர்கள் அன்பு கூர்ந்து தாம்
தூங்குகின்ற நேரத்தில் 1 மணிநேரத்தை சன்மார்க்க பயிற்சிக்காக ஒதுக்கி தூக்கத்தை தினசரி அட்டவணையில் 1 மணிநேரம்
குறைத்துக்கொள்ள வேண்டியது. 1 மணிநேரம் குறைவாக தூங்கி அதில் சன்மார்க்க சாதகர் நிலையில் பயிற்சி செய்தால்
அவருடைய ஆயுளில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கூடும்.தினசரி 1 மணிநேரம் மட்டும் சன்மார்க்க சாதக பயிற்சிக்காக
நேரம் ஒதுக்குபவர்கள் எத்தனை நாளில் சாத்திய நிலையடையலாம் என்பதை கணக்கீடு செய்யலாம்.



சன்மார்க்கத்தில் 1.திருமுறை நிலை 2.அகவல் நிலை 3.மந்திர நிலை 4.மந்திரம் கடந்த நிலை என்று நான்கு
நிலைகள்

உள்ளன.(இதன் விவரங்களை எமது சத்யயுகமும் சன்மார்க்கமும் என்ற நூலில் காண்க).



திருமுறை நிலையை கடக்க செய்ய வேண்டியது யாதெனில் ஆறுதிருமுறைகளில் உள்ள 6000 பாடல்களையும்
ஒருமுறை மனமுருக படிக்க வேண்டும் ஏற்கனவே அருட்பா முற்றோதல் முறையில் அனைத்து பாடல்களையும்
படித்திருந்தால் அதை கணக்கில் எடுத்து கொள்ளலாம்.அவ்வாறு படிக்காதவர்கள் தினசரி 1மணி நேரம் திருமுறைகளை
படித்தால் 120 மணி நேரத்தில் திருமுறைகளை முடிக்கலாம் அதாவது திருமுறைகளை முற்றிலும் படித்து முடிக்க நான்கு
மாதங்கள் ஆகும்.



அடுத்ததாக மகாமந்திரம் அல்லது தாரகமந்திரம் இவைகளை குறைந்த பட்சம் 1 லட்சம் முறை (தான் சொல்வது

தனது காதிலேயே விழும் வகையில் குறைந்த தொனியில்) உச்சரிக்க வேண்டும் இவ்வாறு உச்சரிப்பதில் மனத்தொய்வு
இல்லாமல் ஈடுபாட்டுடன் உச்சரிக்க வேண்டி சன்மார்க்க சாதகர்கள் ஒவ்வொரு ஆண்டும் 112 நாள் விரதமிருந்து தினசரி
ஒருமணி நேரம் மந்திர ஜபம் செய்ய வேண்டும். இவ்வாறாக முன்று ஆண்டுகள் விரதமிருந்து ம்ந்திர ஜபம் செய்தால் 1
லட்சம் மந்திரம் பூர்த்தி ஆகும்.



அதாவது சரியை,கிரியை நிலையில் மகாமந்திரம் சொல்ல 1 முறைக்கு 10 நொடிகள் பயன்படுத்த வேண்டும்.
மூச்சை உள்நோக்கி இழுப்பது 2 நொடிகளும், மூச்சை வெளியிட்டு ம்ந்திரம் சொல்ல 8 நொடிகளும் செலவாகும். இப்படி
செய்தால் ஒரு நிமிடத்திற்கு 6 முறையும் ஒருமணி நேரத்திற்கு 360 முறையும் மந்திரம் உச்சரிக்கப்படும் 112 நாளில் 4032
முறையும் மந்திர ஜபம் முடிக்கலாம். 3 ஆண்டுகளில் 120960 முறை மந்திர ஜபம் செய்து முடிக்கலாம்.
மேலும் திருமுறை நிலையை கடக்க வள்ளல் பெருமானை குருவாகக்கொண்டு இறைவன் ஒருவரே என்ற
கொள்கையில் முழு ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும்.சமய தேவர்களையும் மனதில் வைத்துக்கொண்டு இந்த
நிலையை கடக்கும் ஆவல் கொண்டால் இயலாமல் போய்விடும்.



இவ்வாறாக திருமுறையை கடந்து அகவல் நிலையை அடைய தினசரி 1 மணி நேரம் ஒதுக்குபவர்களுக்கு மூன்று
ஆண்டுகள் செலவாகும்.



அடுத்ததாக அகவல் நிலையை கடக்க வேண்டுமாயின் ஒரு சாதகர் ஆயிரம் முறை அகவல் படிக்க வேண்டும்
தினசரி ஒருமுறை அகவல் படிக்க வேண்டும் தினசரி ஒருமுறை அகவல் படித்தால் மூன்று ஆண்டுகளில் ஆயிரம் முறை
படித்து முடிக்க்லாம். முதலில் அகவல் படிக்கும் போது 2 மணி நேரமும் ஆகும் என்பதால் பாதிபாதியாக படிக்ககூடாது.
ஒருநாளைக்கு ஒரு முறையாகிலும் படித்து முடிக்க வேண்டும் முழு ஈடுபாட்டுடன் படித்து வரும் பட்சத்தில்
ஒருகாலக்கட்டத்தில் 24 நிமிடத்தில் அகவல் படித்து முடிக்கலாம். ஒரு எழுத்துக்கூட தவறு இல்லாமல் உச்சரிக்க வேண்டும்
அடுத்ததாக மந்திர நிலையில் யோக தாரகம்ந்திரம் தொடர்ந்து 108 நாளும் யோக மகமந்திரம் தொடர்ந்து
இடைவெளியில்லாமல் 108 நாளும் யோகம் செய்யவேண்டும்.யோக தாரக மந்திரம் மூலம் யோகம் செய்கையில் மந்திர
புறநிலையையும்,யோக மகாமந்திரத்தை பயன்படுத்தி யோகம் செய்கையில் மந்திர அகநிலையயும் கடக்கலாம்,ம்ந்திர
நிலையில் உள்ள இந்த இரண்டு நிலைகளையும் கடக்க இரண்டு ஆண்டுகள் ஆகும்.



மேலும் மந்திரங் கடந்த நிலையில் சாத்திய நிலைக்கு சாட்சியங்கள் ஏற்பட 1 ஆண்டுகள் ஆகக்கூடும்.

சாதகநிலையிலேயே சாட்சியங்களை ஆண்டவரிடம் விண்ணப்பித்து உருவாக்க நினைத்தால் ஒரு விண்ணப்பத்திற்கு 12
முறை அகவல் படித்த சக்தியானது செலவழிந்து விடும். அதே நேரத்தில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை கைகொள்ளும்
சன்மார்க்க அன்பர்கள் இறைவனால் அனுப்ப பட்ட மனிதர்களுக்காக சாதக நிலையிலும் விண்ணப்பம் வைத்து
பிரச்சனைகளை தீர்ப்பதின் மூலம் ஆன்மநேயத்தை உருவாக்கி செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். நாமாகவலியச் சென்று
யாரிடமும் சன்மார்க்க சக்தியினால் இடையூறு களைவதாக கூறகூடாது.



எல்லா ஜீவர்களிடத்தும் இறைவன் இருப்பதால் யாரையும் காலில் விழ சொல்லவோ விழுவதை அனுமதிக்கவோ
கூடாது. அவ்வாறு செய்தால் சாதகர் அசுர சக்தியாக ஆண்டவரால் கணிக்கப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாவார். வள்ளல்
பெருமானும் தம் பொருப்பிலிருந்து அவரை ஆண்டவரிடம் ஒப்புகொடுத்து விடுவார்.
மேலும் தினசரி 1 மணிநேரம் என்பதை உயர்த்தி 3 மணிநேரம் வரை சாதகம் செய்யலாம், அதற்கு மேல் செய்தால்
மனித உடல் மந்திர சக்தி தாங்காது. தினசரி 1 மணிநேரம் சாதகம் செய்வதின் மூலம் 9 ஆண்டுகளில் சாதகநிலையிலிருந்து
சாத்திய நிலை அடையலாம். அதேநேரத்தில் வழிப்பாட்டிலும் 16 வது நிலையான ஞானத்தில் ஞானம் அடையலாம்.



மேலும் ஒரு மனிதர் 50 வயதுக்குள் சாத்திய நிலை அடைந்துவிட வேண்டும். அதற்குள் மந்திரங்கடந்த நிலைக்கு
பிரவேசித்து விட வேண்டும். 50 வயதுக்கு மேல் முயற்சி செய்தால் உடல் ஒத்துழைக்காது. எனவே அன்பர்கள் 41
வயதுக்குள் சாதக நிலை கை கொண்டு செயல்பாட்டை ஆரம்பிக்க வேண்டியது.
இந்த செயல் முறை அனைத்தும் குடும்பத்தில் உள்ள சன்மார்க்கி அனைவரும் சுலபமாக கடைப்பிடித்து சாத்திய
நிலை அடையலாம்.
மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-2 என்பது காலத்தை நிர்ணயிக்க வெளிபடுத்தப்பட்டது. இதன் விவரங்கள்
அனைத்தும் எமக்கு வள்ளல் பெருமான் உணர்த்தி எழுதப்பட்ட " சத்ய யுகமும் சன்மார்க்கமும்" என்ற நூலில் உள்ளது.
அந்த நூலை படிக்காமல் இந்த செய்தியை விவரித்துக் கொண்டு சென்றால் புரிந்து கொள்வதற்கு சிறிது கடினப்பட்டுவிடும்.
எனவே அந்த நூலில் உள்ள 12 அத்தியாயங்களும் ஒவ்வொன்றாக இந்த பகுதியில் வெளியைடுகிறோம்.

நூலின் முதல் அத்தியாயமான "பண்டைய காலத்தில் வழிப்பாட்டின் தோற்றம்" என்ற தலைப்பில் உள்ள கருத்து
கோர்வையை ''மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-3" என்ற தலைப்பில் வெளியிடப்படும்.



சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை

அகவல்: (1591-1592)
வெளியிடும் நாள்: 27-10-2008 (தீபாவளி திருநாள்)

தொடரும்




ஜோதிமைந்தன் சோ.பழநி

மகாமந்திரபீடம்,திரியம்பல விண்ணகர திருமாளிகை

14,எஸ்.ஆர்.பி. நகர்,காரை,இராணிப்பேட்டை,

வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு

பின் கோடு :632 404

ஈமெயில்:
mahamandhirapeedam@yahoo.com

mahamandhirapeedam@gmail.com

jyothimaindhan@gmail.com

செல்:9942062598,

04172-275071.





10 Comments
P Sujatha
Karunaimughu mahamanithirabeedam Friends,
Good Expalanation of steps in various levels of sanmargam.Really a very hardwork action&Good message by vallalar arul.
With Vallalar Loving,
Aruljothi sujatha
Tuesday, October 21, 2008 at 17:21 pm by P Sujatha
KUMARESAN KRISHNAMURTHY
heartfelt lecture
everyone should take it, if they really want to reach the destination of what vallalar attained.
you have rightly pointed out that one should not practice the volunteer service like all the obstacled can be removed by sanmargam and asking them to prostrate.
Many people do that in the name of vallalar and starting yoga centre and collecting handsome money
your article has explored its title by superb way.
K.Kumaresan
Tuesday, October 21, 2008 at 23:44 pm by KUMARESAN KRISHNAMURTHY
KUMARESAN KRISHNAMURTHY
heartfelt lecture
everyone should take it, if they really want to reach the destination of what vallalar attained.
you have rightly pointed out that one should not practice the volunteer service like all the obstacle can be removed by sanmargam and asking them to prostrate and offer viboothy prasatham.
Many people do that in the name of vallalar and starting yoga centre and collecting handsome amount of money. They also propagate the way what they little bit learnt.
your article has explored its title by superb way.
K.Kumaresan
Tuesday, October 21, 2008 at 23:53 pm by KUMARESAN KRISHNAMURTHY
P Sujatha
Karunaimughu Sanmarga Brothers&Sisters,
I am like to tell one message to all sanmarga Brothers&sisters by through Mahamanthirabeedam comment message.This is vallalar messge. We are all try to do the sanmarga pratices&hear the Good& useful Sanmarga Quesitions&share the Good Sanmarga Experiences.Life time is very short.but, We are all Followed to Sanmarga Principles must. Mahamanithirabeedam serve to Pear way of vallalar sanmargam.So, We are all try to1. Good comment sent to Mahamanithirabeedam,2. Try to follow the pear sanmarga priciples.3.Try to do the sanmargapratices.Most Welcome&Thank you for Mahamanithirabeedam. Wish you all the best to Mahamanthirabeedam's Good sanmarga services by way of support to Vallalar sanmarga devotees.wish you vallalar blessings to all.
With Vallalar Loving,
Aruljothisujatha
Wednesday, October 29, 2008 at 02:38 am by P Sujatha
N Anbazhagan
It is great information, please send like this article in very week to get good energhy
Better take print out and see very day. this may help to reach the our goal.
All best to jothimindhan
N.Anbazhagan
Friday, October 31, 2008 at 07:02 am by N Anbazhagan
P Sujatha
KarunaiMughu Sanmarga Brothers&Sisters,
I am telling to one message to you about KarunaiMughu Mahamanthirabeedam Group. Mahamanithirabeedam essay is not compelling to reading Agaval in 20minutes&Tell the Mahamanthiram.This Group tell to us" All the persons can read Agaval in 20minutes by our SanmargaPractices. I am telling Truth, Agaval Reading is important to each Vallalar Sanmarga Persons.Vallalar is giving to 'SuddhaSanmarga Messages" by Through Agaval.All World Messages are available in Agaval.Some time Vallalar is not Given Agaval,"Arulperumjothi,Thaniperumkarunai" Mahamanthiram we are not Know about SuddhaSanmargam,Mahamanthiram and their Power.Mahamanthiram is not comparing to other Manthirams.This Mahamanthiram is given to Deathlesslife.It is Truth.
Another message Iam telling. Mahamanthirabeedam essays are not only important to Pooja,Manthiram.Mahamanthirabeedam essays Expressed to Jeevakaruniyam Principles Also.My brothers&Sisters, we are reading to Full Mahamanthirabeedam's Essay&Understand.As a Result, We are all understanding to Mahamanthirabeedam,s Sanmarga Services. With Vallalar Loving,AruljothiSujatha
Thursday, November 6, 2008 at 03:11 am by P Sujatha
KUMARESAN KRISHNAMURTHY
Dear sister sujatha
What do you want to tell us?
please explain in detail.
with regards
K.Kumaresan
Thursday, November 6, 2008 at 19:52 pm by KUMARESAN KRISHNAMURTHY
P Sujatha
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
வணக்கம்.மகாமந்திர பீடத்தின் பகுதி-இரண்டின் ஆங்கில,தமிழ் கட்டுரை பற்றிய
உங்கள் அனுபவங்கள் ஏதும் இருந்தால் மெசேஜ் கொடுக்கலாம் அல்லவா?ஏதும் சந்தேகம் இருந்தாலும் முறையான நல்ல கேள்விகளை கேட்கலாம்.வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதிசுஜாதா.
Saturday, July 4, 2009 at 05:20 am by P Sujatha
jayaprathipa
கருணைமிகு ஜோதிமைந்தன் அய்யா,
பலர் மகாமந்திரதையும்,அகவல்,திருமுறைகளை ஓதி கொண்டு வாழ்வில் கொஞ்சமேனும் ஜீவ கருணை ,ஜீவ தயை இல்லமால் இருக்கிறார்கள்.வள்ளலார் தந்த மகாமந்திரத்தை,அகவலை,திருமுறைகளை ஓதாமலும் ஜீவ கருணையோடு வாழ்பவர்களும் உண்டு.அவர்கள் இவைகளை ஓதினால் தான் சன்மார்க்க பெரு வாழ்வை அடைய முடியாதா என்ன? சன்மார்க்க பெரு வாழ்வை அவர்கள் ஜீவகாருணியம் ஒன்று கொண்டு அடையலாம் அல்லவா?ஜீவகாருணியம் இல்லமால் வள்ளலார் பாடல்களை ஓதி என்ன பயன்?
Friday, September 18, 2009 at 00:07 am by jayaprathipa
S Palani
கருணைமிகு நம்மவீர் வந்தனம்,
வள்ளல் பெருமான் அவர்கள் மரணமிலாப்பெருவாழ்வு அடைய வேண்டுமாயின் நினைந்து,நினைந்து , உணர்ந்து, உணர்ந்து,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பெ நிறைந்து,நிறைந்து
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து ,நனைந்து என்று கூறுகிறார். நினைந்து, உணர்ந்து,நெகிழ்ந்து, என்ற அனுபவங்களை பெறுவதின் வழிமுறைகளின் விளக்கமே மேலுள்ள கட்டுரை. அன்பேநிறைந்து என்பது மனிதனுக்கு இயற்கையாக உள்ள கருணை உள்ளம், இயற்கையாக ஜீவ கருணை இல்லாதவன் திருமுறை களை,அகவலை,மந்திரத்தை படித்து கண்ணீர் விடமாட்டான். இவையெல்லாம் இணைந்தால்தான் மரண மிலா பெருவாழ்வு அடைய முடியும். மேலும் இவையனைத்தும் அருட்பெருஞ்ஜோதியரை ஆழ்மனத்தில் அரியாசனம் அமைக்கும் முயற்சியே.நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். முயற்சி செய்யுங்கள்.அருள் கிடைக்கும். அனைத்து கட்டுரைகளையும் படித்து விவரம் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
என்றென்றூம் சன்மார்க்கபணியில்
ஜோதிமைந்தன் சோ.பழநி.
Friday, September 18, 2009 at 07:12 am by S Palani