அற்புத பத்திரிகை
- இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ,
- இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,
- இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும் ,
- எல்லா அண்டங்களையும் ,
- எல்லா உலகங்களையும் ,
- எல்லா பதங்களையும் ,
- எல்லா சத்திகளையும் ,
- எல்லா சத்தர்களையும் ,
- எல்லா கலைகளையும் ,
- எல்லா பொருள்களையும்
- எல்லா தத்துவங்களையும் ,
- எல்லா தத்துவிகளையும்,
- எல்லா உயிர்களையும் ,
- எல்லா செயல்களையும்,
- எல்லா இச்சைகளையும்,
- எல்லா ஞானங்களையும்,
- எல்லா பயன்களையும்,
- எல்லா அனுபவங்களையும்,
- மற்ற எல்லாவற்றையும்
தமது திருவருட் சத்தியால் (பெரும்கருணை பெரும்தொழில்கள்)
- தோற்றுவித்தல் ,
- வாழ்வித்தல் ,
- குற்றம் நீக்குவித்தல் ,
- பக்குவம் வருவித்தல்,
- விளக்கம் செய்வித்தல் ,
முதலிய பெரும்கருணை பெரும் தொழில்களை
- இயற்றுவிக்கின்றவர் என்றும் ,
- எல்லாம் ஆனவர் என்றும் ,
- ஒன்றும் அல்லாதவர் என்றும் ,
- சர்வ காருணயர் என்றும் ,
- சர்வ வல்லபர் என்றும் ,
- எல்லாம் உடையவராய் தனக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லா
- தனிப்பெரும் தலைமை அருட்பெருன்ஜோதியர் என்றும் ,
சத்திய அறிவால் அறியபடுகின்ற உண்மை கடவுள் ஒருவரே,
அகம் புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த, சுத்த மெய்-அறிவென்னும்
பூரண பொது வெளியில், அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.
{ContentRefr:2863}
{ContentRefr:2894}
Write a comment