Vallalar Groups
வள்ளலார் காட்டும் "உண்மை கடவுள்" - Part 4



THIS SECTION IS VALLALAR HANDWRITTEN "SATHYA PERU VINNAPPAM"

வள்ளலாரின் சத்திய பெரு விண்ணப்பத்திலிருந்து ...,


அவ வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் ,
புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள் ஒருவரே என்று அறிகின்ற
மெய்அறிவை விளக்குவித்து அருளினீர். வாலிப பருவம் தோன்றிய போதே

  • சைவம் ,
  • வைணவம் ,
  • சமணம் ,
  • பவுத்தம்

    முதலாக பலபெயர் கொண்டு பலபட விரிந்த , அளவிறந்த சமயங்களும், அச் சமயத்தில்
    குறித்த சாதனங்களும் , தெய்வங்களும் , கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் ,
    அவ் அவ் சமயங்களில் விரிந்த
  • வேதங்கள் ,
  • ஆகமங்கள் ,
  • புராணங்கள் ,
  • சாத்திரங்கள்

    முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனை கலைகள் என்றும் ,
    உள்ளபடியே எனக்கு அறிவித்து அச் சமய ஆசாரங்களை சிறிதும் அனுட்டியாமல்
    தடை செய்வித்து அருளினீர். அன்றியும்,
  • வேதாந்தம் ,
  • சித்தாந்தம் ,
  • போதந்தாம் ,
  • நாதாந்தம் ,
  • யோகந்த்தம் ,
  • கலாந்தம்

முதலாக பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த
மதங்களும் , மார்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள்
என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர்.