Vallalar Groups
வள்ளலாரின் உண்மை பேரனுபவம்



வள்ளலாரின் உண்மை பேரனுபவம்: - VALLALAR REAL VAST EXPERIENCE

உலகியற் கண்

  • பொன் விஷய இச்சை,
  • பெண் விஷய இச்சை ,
  • பொன் விஷய இச்சை

முதலிய எல்லா விஷய இச்சைகளிலும் என்னறிவை ஓரணுத்துனையும் பற்றுவிக்கமால் ,
எவ்வுயிர்களையும் பொதுமையில் நோக்கி , எல்லா உயிர்களையும் இன்படைதல் வேண்டும்
என்னும் கருணை நன்முயற்சியை பெறுவித்து , சுத்த சன்மார்க்க தனி ஒன்றையே பற்றுவித்து ,

எக்காலத்தும் நாசம் அடையாத

  • சுத்த தேகம் ,
  • பிரணவ தேகம் ,
  • ஞான தேகம்

என்னும் சாகா கலா அனுபவ தேகங்களும் ,
தன சுதந்திரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிபெறு வல்லபமும் ,
"கடவுள் ஒருவரே" என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,
கரும சித்தி , ஞான சித்தி முதலிய எல்லா சித்திகளும் பெறுகின்ற அருட்பேரும் பெற்று வாழ்கின்ற
பேரின்ப பெருவாழ்வில்


என்னை அடைவிப்பதற்கு திருவுளம் கொண்டு , அருட்பெருஞ்ஜோதியராகி..

  • நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மை பேரறிவை அறிவித்தும்,
  • நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மை பெரும்காட்சிகளை காட்டுவித்தும் ,
  • நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மை பெருஞ்செயல்களை செய்வித்தும் ,
  • நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மை பெரு நன்மைகளை அடைவித்தும்,
  • நான் எவ்விதத்தும் அனுபவத்தற்கரிய உண்மை பேரனுபவங்களை அனுபவிப்பித்தும்,

எனது அகத்தினும் , புறத்தினும் இடைவிடாது காத்தருளி , எனது உள்ளத்திலிருந்து , உயிரில் கலந்து

பெரும் தயவால் திருநடம் செய்து அருளுகின்றீர்.

இங்ஙனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணை திறத்தை என்னென்று கருதி! ,

என்னென்று துதிப்பேன்!!.

அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை