Vallalar Groups
வள்ளலார் கூறும் "இறைவனின் வண்ணங்கள்"


வள்ளலாரின் சத்திய ஞான விண்ணப்பத்தில் இருந்து ..,

அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் பதியாய பூரணரே!!!
தேவரீர் திருவருட் சமூகத்தின்
  • இயற்கை உண்மை தரத்தை அறிதல் வேண்டுமென்றும் ,
  • இயற்கை பெருங்கருணை பெருந்தன்மையை கருதுதல் வேண்டுமென்றும் ,
  • இயற்கை பெரும்குண பெரும்புகழை துதித்தல் வேண்டும்மென்றும் ,
எனதுள்ளகத்தே ஒவாதுரை துற்றேழுந்து , விரைந்து விரைந்து மென் மேல் பெருகுகின்ற
பேராசை பெருவெள்ளம் அணை கடந்து செல்கின்றது . ஆகலின்,
  • அறிவார் அறிகின்ற வண்ணங்களும் ,
  • கருதுவார் கருதுகின்ற வண்ணங்களும் ,
  • துதிப்பார் துதிக்கின்ற வண்ணங்களும்

ஆகிய எல்லா வண்ணங்களையும் உடையவர் அருட்பெருஞ்சோதி தனிபெரும்கடவுள்
என்ற சத்திய ஞானிகளது உண்மை வாசகத்தை பற்று கோடாக கொண்டு தன்மை சாலா தமியேன்

  • அறிதற்கும் ,
  • கருதுதர்க்கும் ,
  • துதிப்பதற்கும்
தொடங்கினேன்.

இங்ஙனம் தொடங்குவதக்கு முன்னர் எனது அறிவிற்கும் , கருத்திற்கும் , நாவிற்கும்
இயல்வனவாக தோன்றிய வண்ணங்களுள், ஒன்றேனும் ஈண்டு இயற்பட தோற்றாமையின்
"அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கடவுளே".

தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்க்கை வண்ணங்கள் எத்தன்மையவோ!எத்தன்மையவோ !!
என்று உணர்ந்து உணர்ந்து கருதி கருதி, உரைத்து உரைத்து அதிசியிக்கின்றவன் ஆனேன்.
  • இயற்கை உண்மை தனி பெரும்பொருளாயும் /
  • இயற்கை விளக்க தனிப் பெரும்பதமாயும் /
  • இயற்கை இன்ப தனிப் பெரும்சுகமாயும்
பிரிவின்றி நிறைந்த பெரும் தன்மையராய "அருட்பெருஞ்சோதி ஆண்டவரே"