வள்ளலார் 1874 ஜனவரி மாதம் முப்பதாம் நாள் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைத் திரு அறையில் நுழைந்து கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டார். பிறகு இதுவரை அவர் வெளியே வரவில்லை. அவர் என்ன ஆனார்.? பலவிதமான கருத்துக்கள் வந்துள்ளன.
வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார்.
வள்ளலார் இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார்.
வள்ளலார் ஜோதி ஆனார்.
வள்ளலார் அணு அணுவாக மாறி இந்த உலகெங்கும் பரவியுள்ளார்.
அவரது உண்மையான நிலைதான் என்ன? ஒரு சிறு ஆய்வு.
அவரது தூல தேகம் பக்தி,ஒழுக்கம்,தயவு, தவம் ஆகிய நான்கினாலும் சுத்த ,பிரணவ,ஞான தேகமாக மாற்றல் பெற்றது, சுத்த தேகத்தில் நிழல் விழாது.அவரை ஒன்பது முறை போட்டோ பிடித்தும் அவர் உருவம் விழவில்லை. எனவே அவருடைய உண்மை உருவம் நமக்கு இன்றுவரை கிடைக்கவில்லை..அவர் சுத்த தேகம் பெற்றவர்தான் என்பதற்கு இது ஒன்றே போதும். சுத்த தேகம் தோன்றும் பிடிபடும், பிரணவ தேகம் தோன்றும் ஆனால் பிடிபடாது. ஞான தேகம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் 1870 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொழுவூர் வேலாயுத முதலியார் தருமச்சாலையை அந்தச் சமயத்தில் நிர்வாகம் செய்துவந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்கு எழுதிய கடிதத்தில் சந்நிதானம் எங்குள்ளது? அங்கிருந்து வருகின்றவர்கள் பல பல சொல்லும்போது மனம் துடிக்கின்றது என்று கேட்டுள்ளார்.அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு அறிக்கையை வள்ளலார் வெளியிடுகின்றார். அதில் அவர் என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம் .நான் சமீபத்தில்தானே திருவருள் வல்லபத்தால் வெளிப்படுவேன் .அஞ்சவேண்டாம். சாலையை இலகுவாக நடத்துங்கள் என்று கூறியுள்ளார். பிறகு அவர் வெளிப்பட்டார். இவ்வாறு வள்ளலார் அடிக்கடி மறைந்துவிடுவதுண்டு என்று வேலாயுத முதலியார் அடையார் பிரம்ம ஞான சங்கத்திற்கு அளித்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். தான் என்ன செய்து கொண்டேன் என்பதை வள்ளலாரே கூறியுள்ளார்.
மன்செய்து கொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன்
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர். என்று அருட்பாவில் பாடியுள்ளார்.இதற்கு என்ன விளக்கம்.
பஞ்ச பூதங்களில் மண்,நீர் ,நெருப்பு ஆகியவை தோன்றுகின்றன. காற்று தோன்றாவிட்டாலும் உணரமுடி கிறது.ஆனால் ஆகாயம் என்ற ஒன்று தோன்றவும் இல்லை. உணரவும் முடியவில்லை. ஆனால் ஆகாயம் என்ற ஒன்றை இருப்பதாக எண்ணுகிறோம். மற்றவர்கள் காண முடியாதவாறு வான் செய்துகொண்டதை நானும் செய்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்.
மானாகி,மோகினியாய் விந்துவாகி மற்றவையால் காணாத வானமாகி (மகாதேவமாலை 19வது பாடல்) வானானது மற்றவையால் காணாதவாறு செய்து கொண்டதை நான் செய்துகொண்டேன் அதாவது என்னை மற்றவர்கள் காணாதவாறு செய்து கொண்டேன் என்றார்.என்றைக்கும் அழியாத தோன்றியும் தோன்றாமலும் இருக்கக்கூடிய ஞான தேகம் பெற்ற வள்ளலார் என்ன செய்து கொண்டார்; மற்றவர்களால் காணாதவாறு தன்னை ஒளித்துக்கொண்டார். 1870ம் ஆண்டு செய்து கொண்டதும் இதுவே என்கிறார். நாம் சிந்தித்து உணர்வோமாக. நன்றி வந்தனம்.

3 Comments
Superb explanation. But I think we need more research on this direction on similar lines. Like the following
- Do we have any of the 9 photographs currently with any one. I've been trying to ask people, but no success. This will be an important physical evidence.
- Vallalar's Letters compiled based on English date/year. (Thiruvarutpa Urainadai documents based on Tamil Years)
- Thulasiram wrote an excellent book "ArutPerunJothi and Deathless Body Vol I,II". We need similar research that talks about Vallalar's triple deathless body.
Overall, an experienced person like you can write a book on this. It will be a great help for current and future generation. Please let us know if we can be of any help on this.