இராமலிங்க அபயம் துணை


வள்ளலாரைப் பற்றிய எனக்குத் தெரிந்த எல்லா உண்மைகளையும் இங்கே எழுத எண்ணுகிறேன். வள்ளலாரின் பக்தி,தயவு,ஒழுக்கம்,தவம் ஆகிவற்றின் பயனாக இறைவனே வள்ளலாரிடம் அவர் இருந்த இடம் தேடி வந்து கலந்துகொண்டார்.இதனால் வள்ளலார் வேறு இறைவன் வேறு என்ற நிலை மாறி வள்ளலாரே இறைவனாக இருப்பது உண்மை. தனது தூல தேகத்தை மண்ணுக்கோ நெருப்புக்கோ விடாமல் ஞான தேகம் பெற்று இன்றும் தன் உடலோடு இருக்கும் ஒரே ஒரு மகான்  இந்த உலகத்திலேயே வள்ளலார் ஒருவர்தான்.அவரை ஒரு சாதாரண குருவாக மட்டும் எண்ணாமல் இறைவனாகவே புரிந்துகொள்ளுங்கள்.

உலகத்தில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை எல்லாம் நீ அடைந்து விலக்குக என்று ஆண்டவன் வள்ளலாருக்கு ஆணை இட்டதோடல்லாமல் அவரை நமக்குத் துணையாகவும் வைத்திருக்கின்றான்.நமக்குத் துணையாக இருக்கும் வள்ளலார் நமக்கு வரக்கூடிய இடையூறுகளையும் நீக்க வல்லவர். எனவே வள்ளலாரை வணங்கி நாம் இன்பமான வாழ்வு பெற்று வாழ்வோம்.வள்ளலார் இருந்த இடம் தேடி வந்து ஆண்டவன் அவருடன் கலந்து இருவரும் ஒன்றாக உள்ளதால் இறைவன் வேறு அல்ல வள்ளலார் வேறு அல்ல. தன்னை வணங்க வேண்டாம் என்று வள்ளலார்   சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாந்து போகவேண்டாம்.அவர் தன்னடக்கம் மிக்கவர்.அதனால் அவ்வாறு சொன்னார்.இந்த ஜகத்தில் உள்ளவர்கள் மிகத் துதிக்கத் தக்கோனாக என்னைவைத்து என் அகத்தும் புறத்தும் இறைவன் விளங்குகின்றான் என்பது போன்ற அனேக பாடல்கள் அருட்பாவில் உள்ளன. அவற்றையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.வள்ளலாரை வணங்குவோம் இடர்கள் அனைத்தும் நீங்கப் பெற்று அவரது துணையுடம் இன்பமாக வாழ்வோம். . வள்ளலாரை ஒரு குருதான் என்று ஏமாந்து போகாதீர்கள். அவரைத் தெய்வமாக ஏற்று வணங்குங்கள்.  வள்ளலார்ட நம்மோடே இருக்கிறார்.நன்றி இந்தச் சங்கத்திலே வார வழிபாடு,மாதாந்திர வழிபாடு, சத்விசாரம் ஆண்டுதோறும் நம் பெருமானாரின் பிறந்த தின வழிபாடும் நடைபெறுகின்றது.வந்தனம் நன்றி முபா

Welcome to SANMARKA SANGAM AT ALWARTHIRUNAGAR - MUPA

 

 


இராமலிங்க   அபயம்  துணை

Do not delete this word/this line, you can add content before this line

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம் s

Download:

Ganesan  Madurai
ஐயா புத்தகம் download செய்த பிறகு தமிழ் எழுத்து வரவில்லை. சரி பார்க்கவும்
Friday, August 21, 2020 at 01:45 am by Ganesan Madurai
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
கடவுள் குழந்தை ஒரு மாமன்னர்
கடவுள் குழந்தை

இராமலிங்க அபயம் துணை

பேருற்ற உலகிலுறு சமய மத நெறி எலாம் பேய் பிடிப்புற்ற பிச்சுப்

பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும்

போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண் போகாதபடி விரைந்தே

புனிதமுறு சுத்த சன்மார்க்கக நெறிகாட்டி மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்

Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கத்தில் என்னதான் நடக்கிறது
சன்மார்கத்தில் என்னதான் நடக்கிறது

சன்மார்க்கம் பேசுகின்ற பெரியவர்கள் சன்மார்கத்தில் உள்ளவர்கள் திருநீறு பூசினாலோ ,வள்ளலார் உருவமோ படமோ வைத்து வணங்கினாலோ அவர்களைச் சாடுவதே நோக்கமாக இருக்கின்றார்கள். சமீபத்தில் வெளியாகின்ற அறிக்கைகள் அவ்வாறே உள்ளன. ஞான சபையிலே முதன் முதலாகப் பூஜை செய்த அன்பர் திரு ரத்னம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலே ஞான சபையிலே என்றைக்கும் திரையை நீக்கி ஜோதி காட்டியதே இல்லை என்றும் மக்கள் தரிசித்தது திரைக்கு வெளியே செய்த கற்பூர தரிசனம் மட்டுமே என்றும் பூஜை முடிந்தவுடன் Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ஐந்து திருமுறைகளா ஆறு திருமுறையா
ஐந்து திருமுறைகளா ஆறு திருமுறையா

நாம் புரிந்து கொள்ளவேண்டும். 1867 ம் ஆண்டில் திரு அருட்பாவை அச்சிடத் தொடங்கியசமயம் அந்தப் பாடல்களை ஆறு திருமுறை களாகவே பிரித்தார்கள். வள்ளலார்தான் முதல் நான்கு திருமுறைகள் மட்டும் வெளி வந்தால் போதும் என்று கட்டளை இட்டார்கள். அதன்படி முதல் நான்கு திருமுறைகள் மட்டும் முதலில் வெளி வந்தன.ஐந்து திருமுறைகள் வேலாயுத முதலியாரால் பின்பு வெளியிடப்பட்டது. அச்சிடாமல் வைத்திருந்த ஆறாம் திருமுறைப் பாடல்களுடன் பிறகு எழுதிய பாடல்களையும் சேர்த்து ஆறாம் திருமுறையாகப் பின்னர் வெளியிட Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
மரணமிலாப் பெருவாழ்வு.
இராமலிங்க அபயம் துணை

மரணமிலாப் பெருவாழ்வு.

மரணம் என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தால் அந்த உடலை மண்ணில் புதைத்தோ அல்லது நெருப்பில் இட்டோ எரித்து விடுவார்கள்.உடலை விட்டு உயிர் பிரிவதுதான் மரணம்.

உடலை விட்டு உயிரானது பிரியாமல் என்றும் உடம்போடு வாழ்வதே மரணமிலாப் பெருவாழ்வு ஆகும்.

வள்ளலார் அடைந்தாரா?

அவர் அடைந்தார்.அதை அவரே பல பாடல்களில் வெளிப்பைடுத்தி இருக்கிறார்.

Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சமய நூல்களின் உண்மை
.

சமய நூல்களின் உண்மை

பெரிய புராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால்,

அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும் தத்துவமேயாம் சைவ புராணம் ,விஷ்ணு புராணம் , முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ. சம்மாரங்கள் சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ. சம்மாரங்களே இதுபோல் மாணிக்கவாசக ஸ்வாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவ சித்தியே. .மேற் குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு ம Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவது சரியா?
வள்ளலார் படத்தை வைத்தோ அல்லது அவருடைய சிலையை வைத்தோ மற்ற சமயத் தெய்வங்களை வணங்குவது போல் மாலை சாற்றி, பிரசாதம் வைத்து ,கற்பூரம் ஏற்றி வணங்குவது சரியல்ல. தீபத்தை வைத்தே அருட்பெருஞ்சோதி ஆண்டவரைத்தான் வணங்கவேண்டும் என்று ஆணித்தரமாக சிலர் பேசுகின்றார்கள். வள்ளலாரே தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னதற்குப் பின் அவரை வணங்குவது தவறு என்றும் கூறுகின்றார்கள். இதுபற்றி ஒரு ஆய்வு .தயவு செய்து பொறுமையாகப் படித்துப் பார்க்கவேண்டும் என வேண்டப்படுகிறது.

வள்ளலாரைப் பற்றிய உண்மையை நாம் முதலில் அறிந்துகொள்வோமாக

வள்ளலா Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் அனைவரையும் அழைக்கிறார்
நான் உங்களைக் குறித்துத்தான் சொல்கிறேன் என்வார்த்தையைக் கேளுங்கள் -நேர்மையற்ற மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் உங்களால் எனக்கு

எந்தப் பயனும் வேண்டியதில்லை-நான் சொல்லும் உண்மையைப் பொய்யாக வேறு நினைக்கவேண்டாம்-ஏட்டிலே எழுதி வைக்கப்பட்டுள்ள சமயம், மதம் முதலிய எல்லாம் பொய் பொய்யே நீங்கள் அவற்றில் புகுந்து

கொள்ளவேண்டாம்- சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிந்து கொள்ளுங்கள் -தெறிக்கின்ற சிற்சபை நடத்தைத் தெரிந்து துதியுங்கள் சித்தி எலாம் இத்தினமே சத்தியமாக உங்களை அடையும்.

குறித்துரைக்கின்றேன் இதனைக் கேண்மின் Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
அருள் தருவதா அல்லது பெறுவதா?
அருள் தருவதா அல்லது பெறுவதா?

ஒரு சாமியார் மக்கள் நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அங்கிருந்த மக்களிடம் காட்டி இது யாருக்கு வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் அவர் நமக்குத் தருவார் என்று எதிர்பார்த்தார்கள்.சிலர் கேட்கலாமா என்று தயங்கினார்கள்.இப்படியே காலம் கழிந்து கொண்டிருந்தது.திடீரென்று ஒரு சிறிய பையன் ஓடிவந்து அவர் கையிலிருந்த அந்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பிடுங்கிகொண்டு போய்விட்டான்.அந்தச் சாமியார் சிரித்துக் கொண்டார்.ஐயா இது ஞாயமா Read more...
SOULMATE S
இந்த உலக நாடகத்தில், அவரவர்கள் தகுதிக்கேற்ப கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நமது தூல, சூக்கும உடம்பிற்கு ஆற்றலும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், விமானம் போன்றவைகள் அவைகளின் வடிவம், திறன், கட்டமைப்பு போன்றவற்றால் வேறுபாடு அமைகின்றது. அதன்படியே அதன் ஆற்றலும் நிச்சயிக்கப்பட்டது. சைக்கிளை வைத்து பறக்க முடியாது. சமயமத சாதனையை அடைவதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிறது, அப்படி இருக்க சுத்த சன்மார்க்கம் என்பதும், முத்தேக சித்தி என்பதும், அரிதிலும் அரிதாகவே உள்ளது. சமயம் என்ற விமானத்தை வைத்து பூமியை வட்டமடிக்கலாம், ஆனால் அண்டம் விட்டு அண்டம், வெளிக்குள் வெளி கடந்து செல்ல வேண்டுமாகில் பறக்கும் தட்டு போன்ற அதி நவீன கருவி தேவைப்படுவதைபோல, உலக மக்களை சமயத்தில் இருந்து மீட்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், பூமிக்கு தரையிறங்கப் பெற்றவர் வள்ளலார் என்ற மெய்ஞானி,. அதாவது அந்த கதாப்பாத்திரம் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்டது, காரணம் அதற்கான இறைநிலை தகுதியை பெற்றிருந்தமையால். ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்புகளை யாரோ ஒரு விஞ்ஞானி கஷ்டபட்டு கண்டுபிடிக்கிறான், அவர் அதற்காக எந்த ஒரு பெரிய தொகையோ, லாபமோ சம்பாதிப்பதும் இல்லை, அவர் அறிவில் ஆண்டவர் தருகின்ற விஷயத்தை வெளிப்படுத்திவிட்டு இவ்வுலக வாழ்வில் இருந்து மறைகின்றனர்...

சுத்த சன்மார்க்கம் இன்னதென்று வித்திட வந்தவர் வள்ளலார், அவர் பெற்ற இன்பத்தை நம்மால் பெற முடியுமா என்றால் முடியும், ஆனால் அது எப்பிறப்பில் வாய்க்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

நாம் செய்ய வேண்டியது, முயற்சி ஒன்றே. இப்பிறப்பில் நம்மில் யாருக்காவது சுத்த தேகம் மட்டும் கிடைத்தாலே பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதைப்பெறுவதற்குண்டான தடைகள் என்ன என்பதை விசாரித்து, விளக்கம் தந்தால், எதிர்காலத்தில் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்து வாழும் அன்பர்களுக்கு ஊன்றுகோலாக அமையும்.

சில நேரங்களில் தோன்றும், இந்த இடத்தில், இந்த காலகட்டத்தில், இப்படி ஒரு அவதாரப்புருஷர் பிறக்க வேண்டும் என்பது கடவுள் செய்த விதியா என்று.
இது உண்மையானால், நாம் செய்யும் முயற்சிகளுக்கு பயன் உண்டா?
Thursday, August 6, 2020 at 02:09 am by SOULMATE S
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
மரணமிலாப் பெருவாழ்வு.
மரணமிலாப் பெருவாழ்வு.

மரணம் என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தால் அந்த உடலை மண்ணில் புதைத்தோ அல்லது நெருப்பில் இட்டோ எரித்து விடுவார்கள்.உடலை விட்டு உயிர் பிரிவதுதான் மரணம்.

உடலை விட்டு உயிரானது பிரியாமல் என்றும் உடம்போடு வாழ்வதே மரணமிலாப் பெருவாழ்வு ஆகும்.

வள்ளலார் அடைந்தாரா?

அவர் அடைந்தார்.அதை அவரே பல பாடல்களில் வெளிப்பைடுத்தி இருக்கிறார்

.

Read more...