www.vallalarspace.com/durai
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.

திருமந்திரம்

2935. கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.

(ப. இ.) கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சரக்குநிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முளையும் கிழங்கும்போன்று தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ்வின்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக் கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டுகொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.

(அ. சி.) கரும்பும் தேனும் - உண்டலும் உறங்கலும். அரும்பும் கந்தமும் - தோன்றுதலும் நிலைத்தலும். வெளியுறக் கண்டபின் நன்றாய் அனுபவித்த பின். கரும். . . . . . . . புளித்ததே - உண்டலும் உறங்கலும் ஒழிந்தன.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி த
னிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்

 

5 Comments
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
மந்திரச் சொற்களுக்கு எழுதப்படும் உரை இந்தத் தலைமுறைக்கும் புரியும் எளிய தெளிவான நடையில் அமையவேண்டும். பழைய அறிஞர்கள் உரையை அப்படியே எடுத்துப் பதிவதில் என்ன தெளிவு ஏற்படப் போகிறது.இக்கால அறிஞர்கள் இதை உணர்வார்களாக.
Saturday, January 21, 2017 at 00:30 am by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Senthil Maruthaiappan
Just got remembered அருணகிரி நாதர் அருளிச் செய்த கந்தர் அலங்காரம்.

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.


My dad used to play thru olden cassette player this whole series of songs at night during 1980 timings and I get to listen at bed and then asleep after that, and player keeps playing playing...I do not know the count.. very memorable all these songs.
Saturday, January 21, 2017 at 14:28 pm by Senthil Maruthaiappan
Durai Sathanan
ஆஹா, அருமை! படிக்க வந்தது!பதிந்து இனித்தது. நேரமில்லை எளிமைப் படுத்த. வந்ததை வந்தபடி தந்துவிட்டோம். அறிகிறோம் இப்போது உணர்வது எல்லோருக்கும் எளிதல்லவென்று. இனி எளிமைப் படுத்துவோம்! நன்றி அய்யா...அருட்பெருஞ்ஜோதி...
.
Saturday, January 21, 2017 at 17:02 pm by Durai Sathanan
sivadurai sivamayam
அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள் தெளிவு படுத்த வேண்டிய அவசியமில்லா அளவுஎளிய நடையில் தான் உள்ளது. இப்படி இறங்கி பலர் செய்து ஒரு உண்மைக்கு பல தப்பான விளக்கம் வந்து அந்த தப்பான விளக்கத்துக்கு பல விளக்கங்கள் வந்து நான் நீன்னு நின்று கடைசியில் அருட்பாவை விட்டு வெளியே வந்துள்ளீர்கள். செய்யாதீர்கள். தமிழை படியுங்கள். எல்லாம் சிவம் செயல்.
Sunday, January 22, 2017 at 02:16 am by sivadurai sivamayam
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அன்புடையீர்,
ஆண்டவரோ உண்மையை அறிவார் ஆகவேநாம்
ஆண்டவர் உண்மையை சுத்தசிவ துரியாதீதநிலை
அனுபவத்தில் அனுபவித்து அறிந்திட முயல்வோம்
அதுவரையில் துரியமுதலிய அனுபவம் அநந்நியமே!
நன்றி, வணக்கம், வாழ்க, சுபம்! அருட்பெருஞ்ஜோதி...
Sunday, January 22, 2017 at 07:57 am by Durai Sathanan