www.vallalarspace.com/durai
வள்ளலார் மிசன் நடத்தும் அகிலவுலக நேரலையில் பேசவேண்டுமா? அன்புடன் அழைக்கின்றோம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க!

அமெரிக்காவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று வள்ளலார் யுனிவர்சல் மிசன் அகிலவுலக நேரலை நிகழ்வைக் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகின்றது. சிறந்த சொற்பொழிவுகளை ஊரறிய உலகறியச் செய்விக்கின்றது.

இந்த அகிலவுலக நேரலையில் சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு ஆற்றுவதற்கு ஆர்வமுள்ள அன்புள்ளங்கள், அருட்செல்வர்கள் இந்தச் சிறுவனை, "anmaneyam@gmail.com அல்லது durai.america@yahoo.com, அல்லது vallalaruniversalmission@gmail.com" என்ற இ-மெயில்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.

உதாரணத்திற்குச் சில தலைப்புகளை இங்கே தந்துள்ளோம். அருட்சமூகத்து அன்பர் ஆங்கிலத்திலும் தாராளமாகப் பேசலாம். எந்த மொழிகளிலும் தமிழ் கலந்தும், கலக்காமலும் பேசலாம். அதுமட்டுமல்ல, அவரவர்கள் தாங்கள் தங்கள் உள்ளத்திலே நீண்ட நாட்களாகத் தேக்கி வைத்திருக்கின்ற அருள்-ஆன்மீகச் சிந்தனைகளையும் வெளிப்படுத்தலாம்.

இதோ, சிந்திக்கச் சில தலைப்புகளைக் கீழே தந்துள்ளோம்!

1. வள்ளற்பெருமான் வாழ்ந்து காட்டியுள்ள நம்வாழ்வின் நோக்கம்
2. வள்ளற்பெருமான் வாழ்ந்து காட்டியுள்ள உண்மையான தவம்
3. வள்ளற்பெருமான் வாழ்ந்து காட்டிய பேரின்பப் பெருவாழ்வு
4. நீண்ட ஆயுளுக்கு வள்ளலார் வழங்கியுள்ள வழிமுறைகள்
5. சுத்த சன்மார்க்கம் ஒரு பொதுவுடைமைச் சாகாக்கல்வி
6. சுத்த சன்மார்க்கத்தால் ஒரு தனிமனிதனுக்கு என்ன லாபம்?
7. சுத்த சன்மார்க்கத்தால் இவ்வுலகிற்கு என்ன லாபம்?
8. சமயமதம், கல்வி, சாகாக்கல்வி
9. வள்ளற்பெருமான் அருளிய சுப்பிரமணியர் தத்துவம்
10. தமிழகம் இன்னும் சரியாக அறியாத அருட்செல்வர்

நன்றி, வணக்கம், சுபம்!

வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
www.facebook.com/duraisathanan
www.vallalarspace.com/durai

3 Comments
Dhandapani Pavadai
அய்யா நான் சென்னையில் வசிக்கிறேன்.சன்மார்க்க திங்கள் இதழ் செந்நெறி ஆசிரியராக உள்ளேன்.தங்கள் நேரலையில் உரையாற்ற விழைகிறேன்.தாங்கள் கொடுத்த தலைப்புகளில் முக்கியமாக வ.எண்.3குறித்து பேச விரும்புகிறேன்.நன்றி வாழ்த்துக்கள்.
Wednesday, August 30, 2017 at 22:10 pm by Dhandapani Pavadai
Daeiou Team Daeiou.
தங்களது அலைபேசி எண்..தெரிவிக்கவும். தங்களை அவர்கள் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்...எனவேதான்....
Thursday, August 31, 2017 at 07:39 am by Daeiou Team Daeiou.
Durai Sathanan
சன்மார்க்க திங்கள் இதழ் செந்நெறி ஆசிரியராக இருக்கும் தாங்கள், நம்முடைய வள்ளலார் யுனிவர்சல் மிசன், அமெரிக்காவிலிருந்து நடத்துகின்ற அகிலவுலக நேரலையில், மிக அருமையான தலைப்பில்; அதாவது 'வள்ளற்பெருமான் வாழ்ந்து காட்டிய பேரின்பப் பெருவாழ்வு' - என்ற தலைப்பில் உரையாற்ற விழைவது கண்டு பெருமகிழ்வு அடைகின்றோம். தாங்கள் செப்டம்பர் 17, 2017 - ம் நாளன்று, சொற்பொழிவு செய்வதற்குத் தயாராக வேண்டுமாய் இந்தச் செய்தியின் மூலம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன் ஐயா. மேலே தயவுத்திரு.இராமானுசம் ஐயா அவர்கள் குறிப்பிட்டது போல், தங்களின் தொலைபேசியை இங்கு பதிவு செய்தால், தங்களை இந்தச் சிறுவன் தொடர்புகொள்ள உதவியாக இருக்கும். நன்றி, வணக்கம், சுபம்...அருட்பெருஞ்ஜோதி...!
Thursday, August 31, 2017 at 23:13 pm by Durai Sathanan