Karunai Sabai-Salai Trust.
சுத்த சன்மார்க்க உண்மைகளும் -கைவிடப்படவேண்டிய லட்சியங்களும் - APJ. ARUL

சுத்த சன்மார்க்க உண்மைகளும் -கைவிடப்படவேண்டிய லட்சியங்களும்

உண்மை

சத்திய அறிவால் அறியப்படுகின்ற ஓர் உண்மைக்கடவுள் ஒருவரே.
-
வள்ளலார்.

கைவிட வேண்டியவை

சமயங்களில் குறித்த தெய்வங்கள் தத்துவசித்தி விகற்பங்கள் என்று தெரிந்து,

அவையில் லட்சியத்தை கைவிடவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை

கடவுளின் உண்மை அக அனுபவமே....

தயவு என்னும் கருணையே சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம்
-
வள்ளலார்.

கைவிடப்பட வேண்டியவை

சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள்

முதலியவைகùளல்லாம் தத்துவசித்தி கற்பனை கலைகள்.

எனவே அவையை அனுட்டியாமல் இருக்க வேண்டும்.
-
வள்ளலார் (விண்ணப்பம்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை

சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலையறிய, ஒழுக்கம் நிரம்பி

கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால்

நாம் தாழும் குணம். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து

அறிவு விளங்கும்.

ஆதலால் இடைவிடாது 'கருணை' நன்முயற்சியில் பழகல் வேண்டும்

- வள்ளலார்.

கைவிடப்பட வேண்டியவை

சமய சாதனங்கû கைவிடல் வேண்டும்.

தத்துவங்கû உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத்

தியானித்தும், இடையில் ஜபித்தும், கரனாலயமாகச் சமாதி செய்தும்

போன்றவை சமய சாதனங்கள். சாத்தியர்களுக்கு

(சுத்த சன்மார்க்கிகளுக்கு) இவை வேண்டுவதில்லை
-
வள்ளலார் (உபதேசம்)

---------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை

சுத்த சன்மார்க்கத்தில் ஆண்டவர் கட்டûளயிட்டு

முதற்சாதனமாக தந்த திருமந்திரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


கைவிடப்பட வேண்டியவை:

காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும்,

காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும்.

காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம் ஜோதியுட்ஜோதி, சிவயவசி,

சிவயநம, நமசிவய, நாராயணாய நம, சரவணபவாய நம முதலியவை பரிபாஷையாம்.

மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும்,

இவை போன்ற வேறுவகைத் தொழிற்பட்டுப் பிரயாசை எடுப்பது வியர்த்தம் (பயனின்மை).

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை:

சாகாத்தலை

வேகாக்கால்

போகாப்புனல்

- மூன்றும் பரமார்க்கமாகிய ஞான யோகக் காட்சியில்

உண்டாகும் யோக அனுபவங்களின் உண்மைப்பொருள்.

சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளளைன அபரமார்க்கக் காட்சி கூடாது.

பரமார்த்தமாகிய "அக அனுபவமே" உண்மை.

உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். - வள்ளலார்.

கைவிடப்பட வேண்டியவை:

உபாய வகையில், உபாசனாதி மார்க்கமாய் வழிபடுதல் நம் கொள்கை அல்ல.

சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்கு செல்ல கீழ்படிகளளைதலால்,

அவற்றில் ஐக்கியமென்பது இல்லை.

- வள்ளலார்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை:

சர்வசித்தியையுடைய கடவுள் ஒருவரே. உண்மையன்பால் வழிபாடு செய்து

பூரண சித்தியை பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது

சுத்த சன்மார்க்கச் சங்கத்தவர்களுடைய கொள்கை- வள்ளலார்

கைவிடப்பட வேண்டியவை:

ஒரு சித்தியுடையவர் பிரம்மன்

இரு சித்தியுடையவர் விஷ்ணு

மூன்று சித்தியுடைய தொழில் உடையவர் ருத்திரன்

இதுபோன்ற மற்றையர்களும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை:

மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளளைகிய

சமய, மத மார்க்கங்கû அனுஷ்டிப்பது அவசியமல்ல - வள்ளலார்.

சாகாதவனே சன்மார்க்கி.

நித்திய வாழ்வை தரவல்லவர்.

சர்வ சித்தியுடைய தனித்தலைமைப்பதி "பெருங்கருணை"யே - வள்ளலார்.

கைவிடப்பட வேண்டியவை:

சமயத் தேவர்கû வழிபாடு செய்து அற்ப சித்தியை பெற்று

அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏற வேண்டியவைகû

ஏறிப் பூரணசித்தியடையாமல் தடைப்பட்டு நிற்றலை கைவிட வேண்டும்.