Karunai Sabai-Salai Trust.
சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் "தயவு" என்னும் கருணையே. இறையருள் கிடைக்க இந்த 'தயவு' விருத்தியாக வேண்டும் என்கிறார் வள்ளலார்.

தயவு விருத்திக்கு தடையாக சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன. அவையை ஒழித்தால்தான் "பொதுநோக்கம்" வரும்.

இந்த "பொது நோக்கம்" சுத்த சன்மார்க்கத்தின் "சத்திய ஞானாசாரம்" ஆகும்.

சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை என தெரிதல் வேண்டும். அவையாவன.

ஜாதி, குலம், ஆசிரமம், லோக, தேச, கிரிய, சமய, மத, மரபு, கல, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும். தயவு விருத்திக்கு இவைகள் தடையாக உள்ளன. இவை அனைத்தும் உலகில் காணும் சமய, மதங்களில் உள்ளன.

சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழித்தல் வேண்டும்.

அற்பசித்தி - பூரண சித்தி

சமய, மத மார்க்கங்களில் காணப்படும் கர்த்தார், கடவுளர், சமயத் தேவர்கû, வழிபாடு செய்தால் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகû ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைபட்டு விடும். எனவே தான் சமய தேவர்கû வழிபாடு செய்வது அவசியமில்லை. இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம், என்கிறார் வள்ளலார்.

ஐஐஐ. சமய மதங்களில் ஐக்கியம் என்பதேயில்லை.

சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படுவது சாகாத கல்வியே.

பயன் : பூரண சித்தியைப் பெறுவதே. நித்திய வாழ்வை பெறுவதே நமது மார்க்கத்தின் கொள்கை, முடிபு. இந்த "நித்திய வாழ்வை" சர்வசித்தி உடைய நித்தியரால்தான் தரமுடியும். அவரே பெரும் பதியாகிய ஒரே கடவுள் "பெருங்கருணை" கடவுள் ஆகும் என்கிறார் வள்ளலார். சமயக்கடவுளர் "உண்மை கடவுளுக்கு" கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் உள்ளனர் என்பதை அறிந்திடல் வேண்டும்.

எனவே இந்த சமய மதங்களில் ஐக்கியம் என்பதே இல்லை.

இந்த உண்மையை சுட்டிக் காட்டுவதினால் எதற்கு சமயத்தார் மனம் எங்ஙனம் புண்படும்? பண்படத்தான் செய்யும். இந்த கவலை நமக்கு கூடாது. வள்ளலார் சொல்கிறார்:-

சுத்த சன்மார்க்கம் உண்மை தெரிவிக்கிற மார்க்கம்.

வாச்சிய, லட்சிய, உண்மை அனுபவம்

மிக சுருக்கமாக காண்போம்.

சன்மார்க்கங்கள் மூன்று :-

1. சமய சன்மார்க்கம்.

2. மத சன்மார்ககம்

3. சுத்த சன்மார்க்கம்.

1. சமய சன்மார்க்கத்தின் பொருள் :

"குணத்தினது லட்சியத்தை அனுசந்தானம் செய்வது." குணம் என்பது யாது? சத்துவ குணம்.

இதனியல்பாவன :

கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருணியம். இது சத்துவகுணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் "வாச்சியானுபவம்" பெற்று சொரூப அனுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.

2. மத சன்மார்க்கத்தின் பொருள் :

"நிர்க்குண லட்சியம்" செய்வது.

நிர்குணமாவது பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று "லட்சியானுபவம்" பெறுதல். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல், சிநேகனாதல், கடவுúளதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்க முடிவு.

3. சுத்த சன்மார்க்கம் :

குண, நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவமல்லாதது சுத்த சன்மார்க்கம்.

மேற்குறித்த சமய, மத அனுபவங்கû கடந்தது. இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவேயன்றி இல்லாதனவல்ல. இது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம்.

சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா, மூர்த்திகள், ஈஸ்வரன், பிரமம், சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்குமேல் இரா. இவை தத்துவ சம்மாரங்கú. புராணங்களினிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உணமை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும்.

ஆக,

சமய சன்மார்க்கம் : வாச்சியானுபவம்

மத சன்மார்க்கம் : லட்சியானுபவம்

சுத்த சன்மார்க்கம் : உண்மையறிதல்

பயன்

சுத்த சன்மார்க்கத்தில் "அக அனுபவமே" உண்மை.

"கடவுள் நிலையறிய "ஒழுக்கம்" நிரப்புதல் வேண்டும்.

சமய, மத சன்மார்க்கத்தின் பயன் "அற்ப சித்திகள்" பெறுதல்.

சுத்த சன்மார்க்கத்தின் "பூரணசித்தி" பெறுதல். பூரண சித்தியே நித்திய வாழ்வைத் தரும்.

எனவேதான் வள்ளலார்,

சமய, மத மார்க்கங்கû முற்றும் பற்றற கைவிட்டவர்கú "சுத்த சன்மார்க்கத்தார்கள் ஆவார்கள். இது வள்ளலாரின் கட்டû.

"சத்திய வாக்கியம்"

வள்ளலாரின் நெறி

எல்லா சமயத்தார்களுக்கும்

எல்லா மதத்தார்களுக்கும்

எல்லா மார்க்கத்தார்களுக்கும்

"உண்மைப் பொது நெறி" யாக விளங்கும் என்கிறார் வள்ளலார்.

இங்ஙனமாக உண்மையை கண்ட வள்ளலாருக்கு ஒரு குறிப்பிட்ட சமய அடையாளமான விபூதி பூசிய கோலத்தில் காட்டினால் எங்ஙனம் உண்மை பொது நெறியாக விளங்கும்?

கிரியாசாரம், சாதி ஆசாரம், ஆசிரம ஆசாரம், மேலும் பல கொண்டுள்ள சமயத்தை எப்படி ஏற்கமுடியும்.

சமயத்தின் மீது லட்சியம் கைவிட்டுவிட்டால்தான் (விட்ட பிறகே) சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி விளங்கும் என்பதை நாம் உணர வேண்டாமா?

"இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள்" என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சத்திய வாக்கியமாகும்.

வள்ளலார் சமய ஞானியா? நாத்திகரா?

வள்ளலார் தான் கைப்பட எழுதிய விண்ணப்பங்களில் :

"சுத்த சன்மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கிய தடையாகிய சமய, மத, மார்க்கங்கள் ..... என வள்ளலார் குறிப்பிட்டு உள்ளளைர்கள்.

எக்காலத்தும் முக்கியத்தடையாக சமயம், மதம் உள்ளது என வள்ளலார் மிகத் தெளிவாக சொல்லிய பிறகு வள்ளலாரை சைவ சமய ஞானியாக காட்டுவதும், நாத்திகராக காட்டுவதும் அறியாமையே. அபக்குவிகள் ஆவார்கள்.

அழுகிய காய்கறிகû நாம் உபயோகிப்பதில்லை.

ஊசிய பண்டங்கû நாம் உண்பதில்லை.

நான்குமால் பார்க்காமல் சொத்தை வாங்குவதில்லை.

கிழிந்த உடையை நாம் அணிவதில்லை.

உடைந்த பண்டத்தில் சமைப்பதில்லை.

கற்பனையில் சேர்த்த வரவில், செலவு செய்யமுடியாது.

கூட்டிய குப்பையை மீண்டும் வீட்டில் போடுவதில்லை.

இங்ஙனமாகபுலன் அறிவில்தெளிவாக உள்ள நாம்ஆன்ம அறிவில்ஏன் அபக்குவமாக உள்úளளைம்.

வள்ளலார் சமய, மதங்கûளப் பற்றி தனது திருஅகவலில், பாடல்களில் கீழ்வருமாறு குறிப்பிட்டு உள்ளளைர்கள்.

அவை பொய், கற்பனை, வீண், குப்பை, குழப்பம், வீண்வாதம், திரிபுநிலை, மயக்கம் இன்னும்பல.

இங்ஙனம் அவர் சமயம் பற்றி கண்ட உண்மையை எதற்காக நாம் வெளிப்படுத்தக்கூடாது. எதற்காக மற்ற சமயத்தார்களுக்காக அவ்வுண்மையை சொல்லாமல் இருக்க வேண்டும்? அவர் கண்டது பொது நெறி.

அவரையும், அவர்தம் நிலையங்கûளயும் குறிப்பிட்ட சமய கோலத்தில் காட்டினால் மற்ற மார்க்கத்தார்கள் எங்ஙனம் உண்மையறிய அங்கு வருவர்?

சைவ சமயம் சார்ந்த பெரியவர் ஞானி கிருபானந்த வாரியார், நாத்திகவாதியான பெரியார் தந்தை .வெ.ராமசாமியும், இஸ்^ளைம் சார்ந்த சதாவதானி செய்குதம்பி பாவலரும், கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகளும் உண்மை அறிய வந்த இடமே சுத்த சன்மார்க்க நிலையங்கள்.

ஏன் எதற்காக வந்தார்கள்?

சாதி, சமய, மதங்கû "பொய்" எனக்கூறியவரே வள்ளலார் எனத் தெரியாமலா?

திரு அகவலில் மிகத் தெளிவாக உள்ளது.

"சாதியும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி"

ஆனால் கடந்த சில ஆண்டுகளளைக நடைபெற்ற செயல்கள் என்ன?

மிக முக்கியமாக நாம் ஒன்று அறிய வேண்டும். சுத்த சன்மார்க்கத்தார்கள்,

உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட வேண்டும்.

அப்பொழுது தான்

நம் சுத்த சன்மார்க்க நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்கும்.

ஆனால், 01.02.1874 முதல் 27.06.2010 உலக செம்மொழி மாநாடு கருத்தரங்கம் வரை வள்ளலாரை சமயத்திலேயே அல்லது சமயம் தவிர்த்த நாத்திகராகவே காட்ட முயற்சிக்கிறோம். அவர்தம் தனி நெறியில் இல்லை. இதற்கு நம் முயற்சி என்ன?

"தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள்" - வள்ளலார்,

"தனித்தலைவன் லட்சியம் தவிர உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற்குறித்த தலைவனை குறித்ததே தவிர வேறில்லை." என்றதின் மூலம்,

"உபாசனை" மூலம் வழிபடுதல் சரியாகாது. அவ்வழிபாடு மூலம் கடவுள் அருள் பெறுவதற்கு நமக்கு காலமில்லை. அவை மூலம் அற்ப சித்தி பெறலாம். இவை மீது லட்சியம் வைத்தால் பூரண சித்தி பெற முடியாது என்பதே வள்ளலார் கண்ட உண்மை.

மேலும், வள்ளலார், விண்ணப்பத்தில் :- "அவ்வாலிபப் பருவம் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பலப் பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும் அச்சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவசித்தி கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனகறிவித்து அச்சமய ஆசாரங்கûளச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். இதன் மூலம் அறிவது, வள்ளலார் வாலிப பருவத்தில் சைவ சமயத்தில் இருந்ததாக நாம் அறிய வந்தாலும், எந்தொரு அச்சமய ஆசாரங்கû அவர் அனுட்டிக்கவில்லை என்பதே உண்மை. "நன்முயற்சியுடனே" தொடர்ந்து இருந்து வந்ததினால் 'உண்மைக் கடவுû' கண்டார்கள். 'உண்மைக் கடவுû' காண அவர் இருந்த சமயமே காரணமா என்றால், அதற்கு வள்ளலார் சொல்லியது;

நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துIக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் துIக்கி விடவில்லை.”

என்னை இந்த இடத்துக்கு துIக்கிவிட்டது யாதெனில்; தயவு; தயவு என்னும் கருணையே என்னை துIக்கி விட்டதுஎன மிக தெளிவாகவே குறிப்பிட்டதை நாம் உணர வேண்டும்.

சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கú சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் போன்ற மதங்கள் என வள்ளலார் சொல்லியதை நாம் நம்ப வேண்டும்.

MOST RESPECTFULLY SUBMITTED FOR KIND PERUSAL AND CONSIDERATION.--- APJ. ARUL.