இன்று இவரை பற்றி … விழுப்புரம் திரு ஜெய அண்ணாமலை … … …
(அவரிடமிருந்து சேகரித்த தகவல்கள்)
1.
|
பெயர்
|
திரு ஜெய அண்ணாமலை
|
2.
|
தகப்பனார்
|
ஜெயராமன், (வீடூர், திண்டிவனம்)
|
3.
|
தாயார்
|
சரஸ்வதி
|
4.
|
ஜெய அண்ணாமலையின் வயது – மற்றும் படிப்பு
|
39 வயது.
படிப்புத் தகுதி – பனைய புரம் உயர்நிலைப் பள்ளியில் (1984-85ல்) 10-வது வகுப்பு வரை பயின்றுள்ளார்.
|
5.
|
திருமண நிலை
|
1997ல் திருமணம்
|
6.
|
மனைவி பெயர்
|
திருமதி சுமதி
|
7.
|
குழந்தைகள்
|
2.
(1) அருள் பிரபா-4வது படிக்கிறார்
(2) அருளானந்தம் 2வது படிக்கிறார்
|
8.
|
முன்பு வகித்த பதவி
|
Ex. M.C.
விக்கிரவாண்டி பேரூராட்சி
|
9.
|
தற்போது வகித்து வரும் பதவி
(அரசியலில்)
|
அரசியல் பிரவேசம் 2000ஆம் ஆண்டில். விழுப்புரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக 2 முறை பணி புரிந்தது. (அறிமுகம்-முன்னாள் மாநில - காங்கிரஸ் தலைவர் திரு கிருஷ்ணசாமி அவர்களின் மகன் – செய்யாறு சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் திரு விஷ்ணு பிரசாத் மூலம்)
தலைவர், விழுப்புரம் காங்கிரஸ் கமிட்டி (வடக்கு)
|
10.
|
தற்போது வகித்து வரும் சன்மார்க்கப் பதவி
|
தலைவர், விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாட்டுக் குழு.
|
11.
|
சன்மார்க்கத்தில் ஈடுபாடு
|
இளம் பிராயம் முதலே.
|
12.
|
சன்மார்க்க ஆசான்
|
தனது பெற்றோர் மற்றும் இயற்கை உண்மைப் பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
|
13.
|
திருவருட்பாவில் ஈடுபாடு
|
தமக்கு விவரம் தெரிந்த காலம் முதல்
|
14.
|
அதற்கு மூல காரணம்
|
பெற்றோரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சன்மார்க்க நெறி.
|
15.
|
அரசியலில் ஆதாயம்/இழப்பு
|
சொத்து விற்பனை.
|
16.
|
சன்மார்க்கத்தில் கடைப்பிடித்ததால் கிடைத்த
ஆதாயம்
|
எதிலும் பொதுவுடைமை பாராட்டி, பணிகளைச் செய்வது. ஒரு மாவட்டத்தில் மாவட்ட மாநாடு நடத்தும் அளவிற்கு மனத் திண்மையினைப் பெற்றது. வள்ளல் பெருமானின் கருணையால், அதனை நடத்திக் காட்டியது.
|
17.
|
விழுப்புரத்தில் மாநாடு நடத்தக் காரணமாக அமைந்த நிகழ்வு
|
புதுச்சேரி மாநிலத் தலை நகரில் வள்ளல் பெருமானுக்கு 4 மாதங்களுக்கு முன்பு அதாவது 26.4.2008 அன்று எடுக்கப்பட்ட சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு.
|
18.
|
இவரது குணாதிசயம்
|
அனைவரிடமும் ஆன்ம நேய உரிமையுடன் பழகுவது
|
19.
|
அதனால் கிடைத்தது
|
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்திருந்தாலும்,
அனைத்துக் கட்சியினருடனும், கட்சி நிலையைக் கடந்து, ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை பாராட்டி, வாஞ்சையுடனும், சகோதரத்துவத்துடனும் பழகியதால், சன்மார்க்க மாவட்ட எழுச்சி மாநாட்டில் அவர்களையும் பங்கேற்கச் செய்தது. கட்சி பாகுபாடு இன்றி சன்மார்க்க நெறி தெரிந்து கொண்ட அன்பர்கள் தவிர, இது வரை சுத்த சன்மார்க்கம் குறித்துத் தெரிந்து கொள்ளாத அனைவருமே வள்ளல் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இம் மாநாட்டின் மூலம் வழி வகுத்தது.
|
20.
|
சன்மார்க்க எழுச்சியை நடத்திக் காட்டிய விதம்
|
(1) புதுச்சேரியில் நடைபெற்ற மாநாட்டினைப் பார்த்த நாள் முதல், வள்ளல் பெருமானின் அருள் நெறி பரவ வேண்டும் என்பதற்காக கடந்த 4 மாதங்களாக, கண்ணுறக்கம் துஞ்சாது, விழுப்புரத்தில் மாநாடு வெற்றிகரமாக நடத்துவதற்கு, முக்கியமான சன்மார்க்க சான்றோர்களின் ஆலோசனைகளை அவ்வப்போது பெற்றது.
(2) இம் மாநாடு நடத்துவது குறித்து (Hand bills – notices) 2008 ஜூன் மாதம் முதலே வடலூர்ப் பெருவெளியில், அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் சன்மார்க்க அன்பர்களிடமும் விநியோகம் செய்தது
(3) அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சியினரும் பங்கு பெறும் விதத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்களுக்கெல்லாம், பத்திரிக்கையினை முறையாக 10 தினங்களுக்கு முன்பே கிடைக்கும் விதத்தில் அனுப்பியது.
(4) பத்திரிக்கையினை அனுப்பியதுடன் நின்றுவிடாமல், முக்கியமான நபர்கள், சன்மார்க்கச் சான்றோர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மாண்புமிகு அமைச்சர்களை, அயறாது தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு, அவர்களையும், உரிய காலத்தில் இம் மாநாட்டில் பங்கேற்கச் செய்தது.
(5) ப்ளெக்ஸ் பேனர்களில், விழுப்புரம் நகரில் பரவலாக “வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி” யினைக் குறித்த பலவாசகங்களை ஒன்று விடாமல், எழுதி பொதுமக்களின் பார்வைக்கு வைத்தது.
(6) விழுப்புரம் மாநகரில் (மெயின் ரோடில்) உள்ள வீடுகள் தோறும் இம் மாநாடு குறித்த செய்திகளை wall painting மூலம் பரப்பியது
(7) மெயின் ரோடில் பஸ் ஸ்டாப் ஒயின் ஷாப்,. இது போன்ற மற்ற கட்டிட ங்கள் ஆகியவற்றில், ஒன்று விடாமல் இந் நிகழ்ச்சி குறித்து wall painting செய்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்தது.
(8) கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு, விழுப்புரம் நகரை மையமாக வைத்து, நான்கு திசைகளிலும் உள்ள ரோடுகளில், வள்ளற் பெரிமானின் வாசகங்களையும், எழுச்சி மாநாடு நடைபெறுவது குறித்தும், சன்மார்க்கச் சான்றோர்கள், எல்லா அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்பது குறித்த செய்தியை wall painting மூலம், அனைவருக்கும் பரப்பியது
அந்த ரோடுகள் விவரம்
(1) வடக்கில் விழுப்புரம் – கூட்டேரிப்படி வரை (திண்டிவனம் அருகில்)
(2) கிழக்கில் வளவனூர் – கோலியனூர் ஏரியா வரை
(3) மேற்கில் விழுப்புரம் – திருக்கோவிலூர் காணை ஏரியா வரை
(4) விழுப்புரம் – திருவண்ணாமலை செல்லும் ரோடு
(5) விழுப்புரம் – செஞ்சி ரோடு – கிடார் ஏரியா
(6) விக்கிரவாண்டியிலும், கோலியனூரிலும்
(7) விக்கிரவாண்டியிலிருந்து திருக்கணூர் செல்லும் சாலைகளிலும்.
இந்த ஏரியாக்களின் மொத்த தூரம் சுமார் 100 கி.மீ. ஆகும்.
(9) சன்மார்க்கக் கொடி தோரணங்களை, விழா நடைபெறும் கட்டிடத்திற்கு முன்னும் பின்னும் ½ கி. மீ. தூரத்திற்கு கட்டி, மக்களிடம் இது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது.
(10) இரு சக்கர வாகனங்களில் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டு அன்பர்களை, நகர் வலம் வரச் செய்தது. இதன் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
(11) தனக்கு, உடனிருந்த அன்பர்களால் பல விதமான எதிர்ப்பும் தொல்லைகளுக்கும் கொடுக்கப்பட்டும், அனாதரவாக விடப்பட்ட சூழ் நிலையிலும், வள்ளற் பெருமானின் பெரு நெறி ஒன்றே தன்னை இந் நிகழ்ச்சி நடத்தத் துணை புரியும் என்ற திடமான சிந்தனையினை நிலை நிறுத்திச் செயலாற்றியது.
(12) பள்ளிக் குழந்தைகளின் மூலம் தக்க பாடர்களின் மூலம், திரு அருட்பா இசை நிகழ்ச்சி, கோலாட்டம், கும்மி, காவடி, நாட்டியம், வள்ளல் பெருமானின் வாழ்க்கையினைப் பரப்பும் விதத்தில் வடலூர் கோவி. ஆறுமுகம் குழுவினர் மூலம் நாடகம் (26.7.08 இரவு 10 மணி முதல் 12 மணி வரை) திருவருட்பாவின் அருட் கருத்துக்களையும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க க் கொள்கைகளையும், உலகம் அறியச் செய்யும் வண்ணம், தமிழகத்தில் இதுவரை யாரும் நடத்தியிராத விதத்தில் விழுப்புரத்தில் எழுச்சி மாநாடு நடத்தியது.
(13) சன்மார்க்கச் சங்கங்களிடையே உள்ள மன மாச்சரியங்களையும், சங்கத் தலைவர்களிடையே உள்ள உயர்வு, தாழ்வு மனப்போக்குகளையும், சாடி, அனைவரையும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுடன், வள்ளலாரின் கொள்கைகளைப் பரப்புவதற்கென்றே செயல்பட வேண்டும் என மேடையில் முழங்கியது.
14) இந்த மாநாடு குறித்து வடலூரில், பல இடங்களில் ப்ளெக்ஸ் பேனர் மூலம் விளம்பரப்படுத்தியதை – பேனர்களை சிலர் கிழித்து எறிந்தும், தமது மனதை ஒருமை நிலையிலிருந்து வழுவ விடாமல், அருட் பெருஞ் ஜோதி ஆண்டவரின் திரு அருளையே நாடி நின்று, இம் மாநாட்டினன நடத்திக் காட்டியது.
(14) மாநாட்டு அரங்கத்தினுள்ளேயே சித்த வைத்திய மூலிகை அரங்கினை நிர்மாணித்து, திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமனார் அவர்களின் குழு உறுப்பினர்களின் மூலம், உயிர்த்தாவரங்களாக உள்ள கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மூலிகைகளை, அனைத்து சன்மார்க்க அன்பர்களும், மாநாட்டுப் பார்வையாளர்களும் கண்டு பயன்பாடு பெறும் விதம் ஒரு மூலிகைக் கண்காட்சியினை ஏற்பாடு செய்தது.
(15) ஜீவர்களுக்கு ஏற்படும் பல வகை வியாதிகளைப் போக்கும் அரிய வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்ட மருந்துகளை, சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புக்களைச் சார்ந்த அன்பர்களின் மூலம், விற்பனனக்கு ஏற்பாடு செய்தது.
(16) சிங்கப்பூரில் திரு அருட்பா அமுதம் திட்டத்தின் மூலம் உருவான தரமான ஆடியோ சி.டி.களை விற்பனைக்கு ஏற்பாடு செய்து, அனனவரும் பெறுவதற்கு, திருவண்ணாமலை அருள் திரு பாபு சாது அவர்களது அன்பர்களின் மூலம் ஏற்பாடு செய்தது.
(17) சன்மார்க்க மாத இதழ் “ஞான தீபம்” இதழ் ஆசிரியர் திரு முரளீதரன் மூலம், இதுவரை வெளியிடப்பட்ட மாத இதழ்கள் அனைத்துமே ஒரே இடத்தில் கிடைக்கும் விதத்தில், ஸ்டால் அமைத்துக் கொடுத்தது.
(18) திரு அருட்பா 6 திருமுறைகள், உபதேசம், பல சன்மார்க்கச் சான்றோர்கள் எழுதிய புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு, மாநாட்டு அரங்க வளாகத்தில் இடம் ஒதுக்கியது.
(19) திருக்கண்டீஸ்வரம் சாது அய்யா சிவராமனார் அவர்களது அன்பர்கள் மூலம் யோகக் கலைப் பயிற்சியை மேடையில் நடத்த வழிவகுத்தது. அதன் மூலம் யோகக் கலைக்கு – கலந்து கொண்ட அனைவர் மத்தியிலும் ஒரு பிரக்யாதியினை ஏற்படுத்தியது. இலவசமாக இப்பயிற்சி தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.
(20) இம் மாநாடு குறித்து கேள்விப்பட்டு பெங்களூர், சென்னை, மதுரையிலிருந்து வந்த – வள்ளலாரின் அருள் நெறி சார்ந்த சுத்த சன்மார்க்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் புதிய இணணய தளமான “வள்ளலார்ஸ்பேஸ் .காம்” குறித்து, வள்ளலார் ஸ்பேஸ் டீம் , இந்த இணணய தளத்தின் நோக்கத்தினையும் பயன்பாடுகளையும் லேப்டாப் மூலம் போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்தது.
இந் நிகழ்ச்சி, பெங்களூர் சன்மார்க்க அன்பர் திரு கார்த்திகேயன் மற்றும், சென்னையிலிருந்து வந்த திரு சதீஷ் குமார் ஆகியோர் மூலம் ஆர்வப்பட்ட அனைவருக்கும் செய்முறை விளக்கமாக போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இந்த ஸ்பேஸ் டீம் குறித்த நோட்டீஸ்கள், விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றை வினியோகிப்பதற்கு அனுமதித்தது
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கிடையிலும், இந்த வள்ளலார்ஸ்பேஸ் குறித்து, மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கும் தெரியும் வண்ணம் ஸ்பேஸ் டீம் அன்பர் ஒருவர் மூலம், மேடையில் பேசுவதற்கும் அனுமதி வழங்கியது.
21) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பல மாவட்ட அன்பர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தது.
22) அரசியலில் அமைச்சர் பெருமக்களையும் பங்கு பெறச் செய்தது.
|
21.
|
பேராசை
|
விக்கிரவாண்டியில், சத்திய ஞான சபை எழுப்புவது. அதன் மூலம், ஜீவர்களை, சுத்த சன்மார்க்க உயர் பயன் பெற வைப்பது.
|
22.
|
திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமன் அய்யாவிடம் ஏற்பட்ட தொடர்பு
|
15 ஆண்டுகளாக.
|
23.
|
வடலூரில் செய்யும் பணி
|
பிரதி மாதந்தோறும், பூச நாட்களில் வடலூரில் அன்ன தானம், மற்றும் குறிப்பறிந்து பசியாற்றுவிக்கும் பணியை, அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருளுதவியைக் கொண்டு மேற்கொள்வது.
|
24.
|
கடந்த காலங்களில் சாதித்தது
|
பல்வேறு அமைப்புக்களில் ஈடுபட்டதால், இழப்பு
|
25.
|
சுத்த சன்மார்க்க நெறியில் விடாது நிற்பதால் ஏற்பட்ட நிதர்சன லாபம்.
|
(1) பல அன்பர்களது ஒத்துழையாமை.
(2) எல்லாப்பணிகளிலும் தாமே நேரடியாகத் தனித்து இயங்க வேண்டிய ஒரு சூழ்நிலையினை ஏற்படுத்தியது.
(3) அன்பர்களின் மூலம் மிகச் சொற்பமான அளவில் நிதி வரப்பெற்றும், பொருளாதார நிதி நிலை குறைவு.
(3) ஆன்ம லாபம் – சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புவதற்கு தான் ஒரு
கருவியாகப் பயன்பட்டது. ஒரு மன நிறைவு.
தொய்வு ஏற்பட்டிருந்த நிலையை மாற்றி, எழுச்சி மாநாட்டின் மூலம், பலரை, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பற்றித் தெரிய வைத்தது.
|
26.
|
முகவரி
|
திரு ஜெய அண்ணாமலை,.
S/O எம். ஜெயராம், நிர்.177, மெயின் ரோடு, வள்ளலார் துணிக்கடை,
விக்கிரவாண்டி (போஸ்ட்),
பின் கோடு 605 652, விழுப்புரம் மாவட்டம்.
மொபைல் எண் - 99948 – 56314.
|
இன்று .. இவரைப் பற்றி .. திரு ஜெய அண்ணாமலை, விழுப்புரம்.
3 Comments
இவ்வாறு ஒவ்வொருவரும் செய்தால் சன்மார்க்கம் இன்னும் மிக வேகமாக மக்களிடையே பரவும் என்பதில் ஐயமில்லை. இணையதளத்தில் திரு ஜெய அண்ணாமலை பற்றிய செய்தியை பேட்டி கண்டு வெளியிட்ட தயவு ராமனுஜம் அய்யா அவர்களுக்கு வள்ளலார் ஸ்பேஸின் வாழ்த்துக்கள்.
எங்களுக்கு கிடைத்த கடைசி செய்தியின் படி,
திரு ஜெய அண்ணாமலை தனது சொந்த செலவில் மாநாடு எற்பாடு செய்தார்கள் என்றும். மிக சிலரே நன்கொடை கொடுத்தனர் என்றும். எனினும், மிகுந்த பொருட்ச் செலவுக்கு மத்தியல் இறையருளால் மாநாடு இனிதே நடந்தேறியது. ஆகையால் அன்பர்கள் முடிந்தால் அவர் மாநாட்டுக்கு செலவு செய்ததில் நீங்களும் சிறுது பங்கு கொண்டு பயன் பெறுவீர்களாக! அவருடைய தொடர்பு முகவரி
திரு ஜெய அண்ணாமலை,.
S/O எம். ஜெயராம், நிர்.177, மெயின் ரோடு, வள்ளலார் துணிக்கடை,
விக்கிரவாண்டி (போஸ்ட்),
பின் கோடு 605 652, விழுப்புரம் மாவட்டம்.
மொபைல் எண் - 99948 – 56314.
திரு ஜெய அண்ணாமலை அவர்கள் வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ அருட்பெருஞ்ஜோதியே பிரர்த்தித்து வணங்குவோமாக!.
அவரின் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்.