கவிஞர். கங்கைமணிமாறன்
..மில்லியன் டாலர் கேள்வி..!
வள்ளல்பெருமான் முற்பிறவியிலேயே சரியை கிரியை யோகம் முதலிய சாதக நிலைகளை எல்லாம் முடித்து இந்தப் பிறப்பில் ஞானத்தில் நின்று சித்தியும் முத்தியும் பெறுவதற்காக வந்த சாமுசித்தர்.
சாத்திரங்கள் கூறும் மூன்றுவிதமான ஆன்மாக்களில்-
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் நமையொத்த சாமான்யர்...லௌகிக வாழ்க்கையில் கிடந்துழல்வோர் பிராகிருதர் என்னும் முதல்வகையினர்.
ஓரளவு பக்குவம் வாய்ந்த சற்றே மனச்சலனமற்ற வினயசீலர்கள் வைநயிகர் என்னும் இரண்டாமவர்.
சாமுசித்தர்கள் அதிதீவிரப் பக்குவிகள்.முற்பிறப்பில் சாதனங்கள் அனைத்தும் நிறைவேற்றி இப்பிறப்பில் ஞானியாகவே பிறப்பவர்கள்.
புதுமையன் அல்லேன்.தொன்றுதொட்டு உனது பூங்கழற்கு அன்பு பூண்டவன்காண் ..என்கிறார் பெருமான்.
புதியன் என்று எனைப் போக்குதிரோ..நீர்.
பூர்வத்தினும் நின் பொன்னடிக்கு அடிமைப் பதியவைத்தனன்.
ஆயினும் அந்தப் பழங்கணக்கினைப் பார்ப்பதில் என்னே..என்று அழுத்தமாய் தன் முற்பிறவித் தொடர்ச்சியைப் பதிவிடுகிறார் அவர்.
போதம் மிகுந்த சாமுசித்தர்கள்..முற்பிறவித் தேகத்தை விட்டு வந்தபோதும் அந்த ஞானம் கெடாமல் அதன் தொடர்ச்சியாய் இப்பிறவியில் சிவபாவனையில் லயித்து முத்தேக நிலை முற்றி அருளுடம்பு எனும் தனிவடிவம் பெறுவர் என்பதற்கான சான்றொப்பம்...வள்ளலார்.
அவர் வாழ்கிறார் நம்மோடு.
நாம் வாழ்கிறோமா அவரோடு என்பதே ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வி.
2 Comments
venkatachalapathi baskar
அவர் வாழ்கிறார் நம்மோடு.
நாம் வாழ்கிறோமா அவரோடு என்பதே ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வி.

அருமை! அருமை!
Sunday, December 30, 2018 at 06:06 am by venkatachalapathi baskar
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி அய்யன்மீர்.
Sunday, December 30, 2018 at 13:02 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்