கவிஞர். கங்கைமணிமாறன்
கிடங்கும் சடங்கும்
உள்ளம் நிர்வாணமாய் இருந்தால் உடல் நிர்வாணமாய் இருக்கலாம் என்பது சமணர் கருத்து.
  அதனால்தான் திகம்பரர் என்றொரு பிரிவு சமணத்தில் உண்டு.அவர்கள் ஆடை அணியமாாட்டார்கள்.திக்குகளையே அம்பரமாக..அதாவது ஆடையாக அணிந்தவர்கள் என்பது அதன் பொருள்.
  கந்தலும் மிகை என்பது அவர்கள் கருத்து.
   உள்ளம் நிர்வாணமாய் இல்லாதவர்முன் உடல் நிர்வாணம் அருவருப்பூட்டும் என்று நிர்வாணத் துறவியைப் போக்கொழித்தார் திருவொற்றியூரில் நம் திருவருட்பிரகாசர்.
   ஆசை பொய் களவு காமம் கோபம் லோபம் மதம் மாச்சரியம் விருப்பு வெறுப்பு  கொலை பேதம் முதலிய புன்னெறிகளின் கிடங்காக இல்லாமல் நிர்மலமாய் வெட்டவெளியாய் மனங்கள் ஆகாயம் வியாபித்து 
 நிற்பதே நிர்வாணம்.
    நாம் கேடுகளின் கிடங்காக மனத்தையும் சடங்காக சமயத்தையும் அல்லவோ கட்டிக் காத்து வருகிறோம்!!
2 Comments
venkatachalapathi baskar
அருமை எளிமை..!
Monday, December 31, 2018 at 03:18 am by venkatachalapathi baskar
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி அய்யா.
Monday, December 31, 2018 at 13:24 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்