கவிஞர். கங்கைமணிமாறன்
மாமருந்து
வரூஉம் 21 ஆம் தேதி வடலூர் தைப்பூச விழாவில் சபைக்கு அருகில்  திருவண்ணாமலை  பாபு சாது அடிகளார் நிகழ்வில் பிற்பகல் 1.30 மணிக்கு உரையாற்றுகிறேன்.
தலைப்பு: "மாமருந்து"
கோதண்டபாணி S சண்முகம்
மாமருந்து என்று தலைப்பு இப்போது ஒரு சரியாக தலைப்பு தான். அந்த மருந்து எது என்பதை யாரும் தெளிவுபடுத்துவதில்லை. அந்த மருந்து எது என்று ஐயா வள்ளலார் அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.அந்த மருந்து
”சாகா தலை வேகா கால் போகா புனல்" என்று கூறியுள்ளார். ஆனால் அது எதுவென்று இதுவரையில் சன்மார்க்கவாதி என்று கூறிக்கொள்பவர்கள் ஒருவரும் ஆராய்ச்சி செய்ததாக தெரியவில்லை.
அந்த மருந்து எது என்று தாங்களாவது ஆராய்ச்சி செய்து உலகத்திற்கு தெளிவுபடுத்துங்கள்.

அனைவரும் கூறுவது போல்
வேகா கால் என்றால் வாசி என்றும் போகா புனல் என்றால் நமக்குள் உருவாகும் அமுதமென்றும் கூறாதீர்கள். ஐயாவை மனதாற உருகி வேண்டி கேளுங்கள். ஆராய்ச்சி செய்து என்னை போன்றவர்களுக்கு தெளிவை தந்து இவ்வுடம்பை ஒளிவுடம்பாக்ககூடிய மருந்து எதுவென்று தெரியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Friday, January 18, 2019 at 01:31 am by கோதண்டபாணி S சண்முகம்