hariharan elumalai
கணபதி சொற்பொருள் விளக்கம்
 
 
          
           சிவபெரு மானே சிவகண  பதியாஞ்
           சைவ சமயநூல் செப்பு முண்மை 
           கணமெனப் படுவது வுயிர்களின் தொகுதி
           கணபதி யென்பது வுயிர்களின் தலைவ
           னுயிர்களை நடத்தி வுய்வுறச் செய்பவ
           னுயிர்த்துணை யாகி யாவுமா யிருப்பவன்
           சிவமய மெனுஞ்சொல் செப்பு மிதனை
           தவமிகுப் பெரியோர்த்  தந்த விளக்கம்
           செம்மைப் பொருள்தருஞ் சீரியச் சொல்லை
            தும்பிக் கையான் திருப்பெய ராக்கினர்
            சிவமே முதலெனுஞ்  செந்தமிழ் மறையை
            பவமுறத் துணிந்து மறைத்தனர் போலு
            முள்ளதை யுள்ளவா றுரைக்க  மறுத்துக் 
            கள்ள மனத்தால் களஙரகம் செய்தனர்
            தள்ளுகப் பொய்நெறித் தகுமெய் நாடி 
            கொள்ளுகச் சிவநெறிகர குவலய மோங்கவே.

                     திரு முத்துராமலிங்கம் ஐயா அவர்களின்  முறையீடு என்னும் நூலிலிருந்து.
2 Comments
Hariharan Elumalai
14 ம் வரியில் களங்கம் என்பது களஙரகம் என்று பதியப்பட்டது. மன்னிக்கவும்
Saturday, January 21, 2017 at 11:15 am by Hariharan Elumalai
sivadurai sivamayam
மிகவும் நன்றி. என்னை பொறுத்தவரை உங்களுக்கு நன்றி சொல்வேன். சமயதோத்திரம். கணபதி நான் வணங்கும் கடவுள். ஆனால் இது அருட்பிரகாசர் சுத்த மார்க்க நெறிக்கு உள்ள வேப்சைட். இதை தான் மதுரை கருணை சாலை அருள் சொல்லி வந்தார். அவரை காணோம். நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றம் என்பது எனக்கு பிடித்த வாக்கு.இங்கு சமய கடவுள் கூடாது. இது என் கோரிக்கை. எல்லாம் சிவமயம்.
Sunday, January 22, 2017 at 02:23 am by sivadurai sivamayam