அருள்பாவலர் சக்திவேல் .வே
ஒருங்கிணைந்த... சன்மார்க்க சங்கம்...!
வள்ளல் பெருமானாரின் கொள்கைகளுள் முதன்மையானது ஒருமைப்பாடு.....!

சாதி , மதம் , அரசியல் , பொருளாதரம் எனும் எந்த நிலையிலும் மனித இனத்தில் பேதம் இருக்கக் கூடாது என்று வள்ளல் பெருமானார் விரும்பினார்கள் .

வாடிய பயிர்.... ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மனித இனம் வரை .... சமமாக மதிக்கப்பட வேண்டுமென்று வள்ளல் பெருமானார் போதித்தார்கள்.

இப்படி ....

ஒருமைப்பாட்டைப் போதித்த வள்ளலார் அன்பர்களிடத்து - சன்மார்க்க சங்கங்களிடத்து ஒற்றுமையில்லாது.... ஒரே ஊரில் இரண்டு - மூன்று சங்கங்களாகச் செயல்படுவது பொதுமக்களிடத்து... முக சுழிப்பை ஏற்படுத்துகின்றது...

ஒவ்வொரு சன்மார்க்க சங்கமும் தனிப்பட்ட முறையில் அருமையாகச் செயல்படுகின்றது. ஆனால்.... அவற்றினூடே ... காழ்ப்புணர்ச்சியும்...சில இடங்களில் தலை தூக்கியிருப்பதைக் காண முடிகின்றது..!

எனவே... உலக நாடுகள் முழுவதும் இயங்கும் சன்மார்க்க சங்கங்கள்... ஒருமையுடன்... ஒருமைப்பாட்டுடன்... ஒரே குடையின் கீழ் செயலாற்றினால் சிறப்பாக இருக்குமென வளரும் தலைமுறையினர் விரும்புகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க சங்கங்களை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைதான் என்ன...?
அதற்கான செயல் திட்டத்தை எவ்வாறு அமைப்பது...?

சன்மார்க்கச் சான்றோர்கள்.... தங்கள் கருத்தைச்... செயல் திட்டத்தைச் ... சாத்தியக் கூறுகளை.... இங்கே பதிவிடலாமே......!...?

venkatachalapathi baskar
1960 முதல் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு பல கூட்டமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டு அவைகள் எல்லாம் காலவெள்ளத்தில் உடைந்து மறைந்து போயின.



இன்றைய காலகட்டத்தில் ஒரு சன்மார்க்க சங்கம் ஆரம்பித்து விட்டால் அதற்கு எக்ஸ்பயரி டேட் மூன்று வருடம் தான். அதற்குள் அச்சங்கம் இரண்டாக உடைந்து விடும். என்னுடைய அனுபவத்தில் நான் இவ்வாறு பல சங்கங்கள் உடைந்து இருப்பதை பார்த்திருக்கிறேன்.


கருத்து மோதல்கள், விழா நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், அனைவரையும் அரவணைத்து செல்லாமை,சங்க நிதி தொடர்பான விபரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்,பொது நலம் கருதாது சுயநலமாக செயல்படுவது, சங்க நிதிகளில் முறைகேடு செய்வது என்று பல பிரச்சினைகளால் சங்கங்கள் உடைகின்றன.


சன்மார்க்கிகள் என்று கூறுபவர்கள் இப்படி செயல்பட்டால் என்னதான் செய்வது?
Friday, May 17, 2019 at 04:30 am by venkatachalapathi baskar